
கசப்பான வைராக்கியம் |
கி.பி 1592-1598 வரை ஜப்பானியர்கள் கொரியா தேசத்தை கைப்பற்றி அதில் ஊடுருவி இருந்தார்கள். மற்ற எல்லாரை பார்க்கிலும் ஜப்பானியர் கொரியர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். விசேஷமாக பெண்களையும்;, சிறு குழந்தைகளையும் அவர்கள் நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இன்றளவும் அந்த காயங்களை மனதில் சுமந்தபடி வாழுகின்ற கொரியர்கள் உள்ளனர்.
ஜப்பானியர்கள் கொரியாவை கைபற்றியவுடன் முதலில் செய்த காரியம், அங்கிருந்த தேவாலயங்களை இழுத்து மூடியதுதான். மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனெரிகளை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ஞாயிற்று கிழமைகளில் ஆராதனைகளை முழுவதும் நிறுத்திய ஜப்பானியர், முக்கியமான போதகர்களை சிறையில் அடைத்தனர்.
அதில் ஒரு போதகர் மாத்திரம் தான் இருந்த இடத்தின் காவல் துறை அதிகாரியிடம் அடிக்கடி போய், தன் சபையை ஒரு ஞாயிறு ஆராதனையை மாத்திரம் அனுமதிக்கும்படி கேட்டு கொண்டே இருந்தார். அவருடைய தொல்லையை பொறுக்காமல், அந்த அதிகாரி ஒரு ஞாயிறு ஆராதனைக்கு அனுமதித்தார். உடனே வேகமாக செய்தி பரவியது.
இதுவரை ஆராதனைக்கு செல்ல முடியாமல் இருந்த கிறிஸ்தவர்கள், அனுமதி கிடைத்தவுடன், சூரியன் உதிக்குமுன், குடும்பமாக ஆலயத்திற்கு சென்று, காத்திருந்து, நேரமான உடன், கதவுகளை அடைத்து கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்தனர்.
கொரிய சபை மக்கள் மிகவும் அழகாக பாடுபவர்கள். அவர்களின் பாடல் சத்தம் மூடியிருந்த கதவுகளையும் மீறி வெளியே அழகாக ரீங்காரமிட ஆரம்பித்தது. அவர்கள் உம்மண்டை கர்த்தரே என்னும் பாடலை பாட ஆரம்பித்தபோது, வெளியே இருந்த ஜப்பானிய அதிகாரி ஒருவன் தன் படைக்கு உத்தரவிட ஆரம்பித்தான்.
ஆலயத்தின் பின்புறம் இருந்தவர்கள், கதவுகள் திறக்கப்படும் சத்தத்தை கேட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருவரும் அறியவில்லை, அந்த ஆலயம் முழுவதும் மண்ணெண்ணையால் ஜப்பானியர் முழுக்கி கொண்டிருக்கிறார்கள் என்று. பின் அதன் மேல் நெருப்பை வீசி, புகை வர ஆரம்பித்த போதுதான், உள்ளே இருப்பவர்களுக்கு தங்கள் ஆலயம் நெருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே உள்ளே இருந்தவர்கள் ஜன்னலின் வழியாக தப்பும்படி வெளியே போக துடித்த போது, வெளியே இருந்த ராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகள் அவர்கள் மேல் பாய்ந்தது.
போதகருக்கு தெரிந்தது, தனக்கும் தன் சபையினருக்கும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்று. வெளியே கொரியர்கள் தங்கள் மக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அநீதியை கண்டு கொண்டிருக்க, போதகர், இந்த பாடல் வரிகளை பாட ஆரம்பித்தார், உடனே சபையாரும் அவருடன் இணைந்து, தங்கள் கண்களுக்கு முன் நெருப்பு கொழுந்து விட்டு எரிய தங்கள் கூரைகீழே விழுந்து அனைவரும் மடிவதற்கு முன் பாடினார்கள், But drops of grief can ne’er repay the debt of love I owe: Here, Lord, I give myself away ‘Tis all that I can do! At the cross, at the cross Where I first saw the light, And the burden of my heart rolled away — It was there by faith I received my sight, And now I am happy all the day.
அவர்கள் பாடியதை வெளியே இருந்த ஜப்பானியரும், கொரியர்களும் கேட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடியபடியே மறுமைக்கு கடந்து சென்றார்கள்.
எரிந்து போனவர்களின் சடலங்களை எடுத்து சுத்தம் பண்ணுவது எளிது, ஆனால் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த வேதனையையும், வெறுப்பையும் எடுத்து விடுவது எளிதல்ல. அதுவும் மரித்தவர்களின் உறவினர்கள் ஜப்பானியரின் மீது கொண்டிருந்த வெறுப்பு அதை அணைப்பது என்பது மிகவும் அரிதானதாக மாறியது.
வருடங்கள் கடந்தன. கிறிஸ்தவர்க்ள எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு ஞாபகார்த்த மண்டபம் கட்டப்பட்டது.அதை காணும்போதெல்லாம் கொரியர்களின் உள்ளங்களில் ஜப்பானியர்களின் மேல் வெறுப்பு அதிகமாய் கொழுந்து விட்டு எரிந்தது. கிறிஸ்தவர்களாயிருந்தாலும், உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கும் கிறிஸ்துவின் சமாதானம் அவர்களது உள்ளத்திலிருந்த வெறுப்பினால் மறைந்து போயிருந்தது. ஆனால் அது அப்படியே இருக்கவில்லை.
1972ம் வருடம் ஜப்பானிலிருந்து ஒரு போதக குழு கொரியாவிற்கு வந்தார்கள். அவர்கள் அந்த ஞாபகார்த்த மண்டபத்திற்கு வந்த போது, தங்கள் மூதாதையர் செய்த குற்றத்தை கண்டார்கள். அவர்களுக்கும் அந்த செய்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், தங்கள் நாடு தப்பிதம் செய்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியுடன், தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று, தங்கள் கூட இருக்கும் விசுவாசிகளிடம் நடந்த விஷயங்களை கூறி, பணம் சேகரித்து, திரும்ப வந்து, கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டினார்கள்.
அது திறக்கப்படும் நாளிலே அனைவரும் கூடி, அந்த ஆலயத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்து, ஆராதனை முடியும் தருவாயில், ஒருவர் எழுந்து, அந்த எரிந்து போன கிறிஸ்தவர்கள் பாடிய இரண்டு பாடல்களையும் மீண்டும் பாடுவது, அவர்களை நினைவு கூருவது போலிருக்கும் என்று கூற, உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என பாடலை பாட ஆரம்பித்தார்கள்.
பாடி முடித்து, சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில் (At the cross at the cross where I first saw the light) என்ற பாடலை பாடும்போது, ஜப்பானிய போதகர்களின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர்கள் தங்கள் கொரிய நண்பர்களின் கரங்களை பிடித்து கொண்டு, கண்ணீரோடு தங்களை மன்னிக்குமாறு கெஞ்ச ஆரம்பித்தார்கள்.
கொரியர்களின் இருதயம் கரையவில்லை, ஆனாலும் விடாமல் ஜப்பானியர்கள் கேட்டு கொண்டிருந்தபோது, அந்த பாடலின் அர்த்தத்தை அவர்கள் கேட்டு கொண்டிருந்தபோதுதானே, கர்த்தர் கொரியர்களின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தார்.
ஒரு கொரிய சகோதரன், ஜப்பானிய சகோதரனின் கரங்களை பிடித்தார். அதை கண்ட மற்றவர்களும் ஒருவரை யொருவர் கட்டிபிடித்து கொண்டு கதற ஆரம்பித்தனர். அத்தனை நூற்றாண்டுகளாக இருந்த பகைமை மறைந்து கிறிஸ்துவின் அன்பு பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஜப்பானியரின் மன்னிப்பின் கண்ணீரும், கொரியர்களின் மன்னித்ததன் கண்ணீரும் கலந்து, அந்த இடம் முழுவதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பியது.
பிரியமானவர்களே, நாமும் யார் மேலாவது, கசப்பையும் விரோதத்தையும் வைத்து கொண்டிருக்கிறோமா? கிறிஸ்துவின் சிலுவை அன்பு நம்மிலும் கடந்து வரட்டும். மற்றவர்களின் குறைகளை நாம் மன்னிப்போம். கிறிஸ்து எந்த தவறும் செய்யாதிருந்தும் அவரை சிலுவையில் அறைந்தவர்களை பார்த்து, பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று சிலுவையில் இருந்தபடியே வேண்டினாரே, கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்கிற நாமும் அவருடைய அடிச்சுவடிகளில் நடக்க வேண்டாமா?
கசப்பான வேர் நமக்குள் முளைத்தெழும்ப வேண்டாம், கர்த்தருடைய கிருபையை நாம் இழக்க வேண்டாம். எத்தனையோ வருடங்கள் கழித்து, ஜப்பானியர்கள் மேல் இருந்த வெறுப்பை கொரியர்கள் மன்னித்தார்களே, சாத்தான் அந்த இடத்தில் தோற்று போனானே, நாமும் சத்துரு வெட்கப்படும்படியாக, மற்றவர்களை மன்னித்து, கர்த்தருக்கு மகிமை கொண்டுவருவோமா?
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், எச்சரிக்கையாயிருங்கள் (எபிரேயர் 12:15) |
Similar Searches:
tamil christian bible story, christian bible story in tamil, tamil christian bible stories, christian tamil stories, jesus tamil bible, christian tamil bible, christian tamil books, bible stories tamil pdf, tamil christian bible study pdf, christian tamil story, christian bible story for kids, what is the story of christian, christian books for 10 year olds, story bible examples, what is the christian story of creation, christian bible story, christian bible story in tamil, christian bible story for children, christian bible lesson for kids, christian bible stories for toddlers, christian books for 7 year olds, christian story books for 8-10 year olds, christian books for 7th graders, bibles for 5-7 year olds
Click Here To Read More Tamil Christian Stories