காதுள்ளவன் கேட்கக்கடவன்

பிரசித்திப் பெற்ற தேவ ஊழியர் ஜான் வெஸ்லி அவர்கள் பிரசங்க கூட்டத்தில், ஒரு குதிரை வண்டி ஓட்டுநர் அங்கு பாடும் பாடல்களைக் கேட்க வந்திருந்தார். ஆவிக்குரிய காரியங்களில் எந்த அக்கறையும் இல்லாமல், பாட்டுகளும் இசையும் நன்றாக இருக்கிறது என்று, அதை மட்டும் கேட்டுவிட்டுப் போகலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

செய்தி வேளை வந்தபோது, அதைக் கேட்க மனதில்லாமல், தன் காதுகளை தன் விரல்களினால் அடைத்துக் கொண்டார். அப்போதுப் பார்த்து, ஒரு ‘ ஈ ‘ அவரது மூக்கின் மேல் வந்து அமர்ந்தது. அதை விரட்டுவதற்காக ஒரு காதை அடைத்து வைத்திருந்த விரலை எடுத்தார். அப்பொழுது சரியாக ஜான் வெஸ்லி, “காதுள்ளவன் கேட்கக்கடவன் ” என்ற சொல்லிய வார்த்தையைக் கேட்டார்.

கர்த்தருடைய அந்த வார்த்தை கிரியை செய்ய ஆரம்பித்தது. அன்று இரவு அவரால் தூங்க முடியவில்லை. அடுத்த நாள் கூட்டத்திறகு வந்து, வசனத்தைக் கேட்டு தன் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்தார்.

நாம் எதைக் கேட்கிறோம்? தேவ வார்த்தைகளையா? அல்லது உலக வார்த்தைகளையா? அரசியல் பேச்சுகளை ஆவென்று வாய் பிளந்து கேட்கும் கூட்டம், தேவ வார்த்தைக்கு தன் செவிகளை அடைத்துக் கொள்கிறது. ஆதலால் நாம் கேட்கிற விதத்தைக் குறித்து கவனமாயிருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. பிசாசானவன் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு நாம் செவி கொடுக்காமல் தேவனுடைய வார்த்தைகளுக்கு செவி கொடுப்போமாக.

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்  (லூக்கா 8:18) கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (மத் 11:15)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 2 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *