
கோபத்தின் விளைவு
ஒரு பாம்பு ஒன்று தன்னுடைய பசியை ஆற்றுவதற்காக வேகமாக ஒரு சமையலறைக்குள் நுழைந்தது. நுழைந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது அது ஒரு கத்தியின் மேல் மோதி விட்டது. அந்த கத்தி கீறியதால் அதற்கு வலி தாங்க முடியவில்லை.
என்னையா கீறினா என்று திரும்பி கோபத்தோடு சீறிப் பார்த்து, திரும்பவும் ஒரு கொத்து கொத்தியது. கத்தி, வாயில் பட்டதும் கீறல் விழுந்து மிகவும் வலி ஏற்பட்டது. உடனே மீண்டும் மிகுந்த கோபத்தோடு அந்தக் கத்தியை சுற்றி சுழன்று பிணைந்தது. அதன் உடம்பு பகுதி துண்டு துண்டாகி செத்து விழுந்தது. கோபத்தினால் விளைந்த விளைவு என்ன பார்த்திங்களா குட்டீஸ்!
அதுபோல தான் குட்டீஸ்! கோபம் ஒரு மனிதனின் வாழ்க்கையை அழித்துவிடும். அதுவும் யார் மீது மோதுகிறோம் என்பதை உணராத பாம்பின் நிலைமை பரிதாபம். தன்னுடைய கோபத்தினால் உயிரே போய்விட்டது. ஆகவே, எதையும் யோசித்து, அறிந்து, நிதானமாக செயல் பட வேண்டும்.
குட்டீஸ்! கோபம் என்பது ஒரு உணர்வு அதை நமக்கு கட்டுப்படுத்த (அடக்க) தரிந்திருக்க வேண்டும். வேதத்தில் கூட யாக். 1:19ல் கோபிக்கிறதற்கு தாமதமாயும் இருங்கள் என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 0k வா குட்டீஸ்! உங்களுக்கும் இப்படிப்பட்டதான குணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலமும் ஆசீர்வாதமாகவும், ஒளிமயமாகவும் இருக்கும். |
Click Here To Read More Tamil Christian Kids Stories