
உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள் [II கொரிந்தியர் 13 : 5] |
மாலை நேரம்! பயங்கர போக்கு வரத்து நெரிசல்! விக்டர்கடிகாரத்தைப் பார்த்தார். பள்ளி முடிய சில நிமிடங்களே இருந்தது. சந்துசந்தாக நுழைந்து ஒரு வழியாய் பள்ளிக்கூட வாசலை வந்தடைந்தார். விக்டர் பள்ளிக்குள் நுழையவும், பெல் அடித்து டெய்சி புத்தகபையை தூக்கியபடி வெளியே வரவும் சரியாக இருந்தது.
அப்பாவைப் பார்த்ததும் டெய்சி துள்ளி குதித்து ஓடி வந்து அப்பாவின் பின் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். களைப்புடன் வீட்டிற்குள் வந்த டெய்ஸியைப் பார்த்ததும் அம்மா, (டெய்ஸி, முகம் கை கால் கழுவி விட்டு வா, காபி கொண்டு வருகிறேன்’ என்று கூறிக் கொண்டே சமையலறைக்குள் சென்றார்கள்.
சுட சுட பஜ்ஜியுடன் காபியும் கொண்டு வந்து கொடுத்தார்கள். பஜ்ஜி சாப்பிடுகிறபோது ‘இன்று காலாண்டு பரீட்சை பேப்பர் கொடுத்தார்களா? நீ என்ன மதிப்பெண் வாங்கி இருக்கிறாய்?” என அம்மா கேட்டார்கள். அதற்கு டெய்ஸி, இன்று கணக்கு பேப்பர் மட்டும்தான் கொடுத்தார்கள். அதில் 50-க்கு 47 வாங்கி இருக்கிறேன் என சந்தோஷமாய் சொன்னாள்.
கடந்த முறையை விட கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்கிறாய். நல்லது. எந்த 3 விடை தவறாக எழுதி இருக்கிறாய்? பேப்பரை எடு பார்ப்போம்’ என கேட்டார்கள். அதற்கு டெய்ஸி, அம்மா நான் 47 மதிப்பெண்ணிற்கான விடை சரியாக எழுதியிருக்கிறேனே. அதை பாராட்டி சந்தோஷப்படூங்கம்மா தவறாக எழுதினது 3 விடை தானே. விடுங்கம்மா’ என்றாள்.
அதற்கு அம்மா, “உன் பேப்பரை எடு. நீ விட்ட3 தவறுகளையும் கண்டுபிடித்து, அதை எப்படி சரி செய்வது என்று இப்போதே தெரிந்து கொண்டால்தான், அடுத்து வருகிற அரையாண்டு தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுக்கமுடியும்’ என்று அன்பாய் விளக்கி சொன்னார்கள்.
டெய்ஸிக்கு தன் தவறு அப்போதுதான் புரிந்தது. கடந்த மாத தேர்வில் விட்ட அதே தப்பைத்தான் இப்ப திரும்பவும் நான் விட்டிருக்கிறேன். நீங்க சொன்னது மாதிரி அப்பவே நான் பார்த்திருந்தால், இப்ப சரியாய் செய்திருப்பேன் என உணர்ந்தவளாய் சொன்னாள். தன் பையில் இருந்த விடைத்தாளை எடுத்து, தவறு எதனால் வந்தது என கண்டு பிடித்தாள். இனி அதே தவறு திரும்ப வராது என அவள் முகம் காட்டியது.
அவனவன் தன்தன்; சுயகிரியையை சோதித்துப் பார்க்கக்கடவன் (கலா.6:4). பிறருடைய தவறுகளை எளிதாய் கண்டுபிடித்துவிடுகற நம் கண்கள், நம்முடைய தவறுகளை கண்டுபிடிக்கும்படி இறக்கட்டும். இன்று மனஸ்தாபப்பட்டால்தான், நாளை மனமாறுதல் உண்டாயிருக்கும்! |
Click Here To Read More Tamil Christian Stories