பென்சில்‌ ரப்பர்‌

பென்சில்‌: Hi! ரப்பர்‌ How are you!… ஒவ்வாரு முறை நான்‌ செய்யும்‌ தவறுக்கும்‌ என்னை சுத்தப்படுத்தி, தூய்மையாக்கி விடுகிறாய்‌… ஆனால்‌ என்னை சுத்தம்‌ செய்யும்போது நீ கரைந்து கொண்டே போகிறாயே! அது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றது.

ரப்பர்‌: அது என்‌ கடமை! நான்‌ படைக்கப்பட்டதே, அதற்கு தான்‌. என்னை கண்டு நீ வருத்தப்பட வேண்டாம்‌, இதில்‌ எனக்கு முழு மகிழ்ச்சி! என்னால்‌ உன்‌ தவறுகள்‌ அழிக்கப்பட்டு நீ திருத்தங்களுடன்‌ முன்னேறி சென்றால்‌ அது நல்லது தானே. அத பற்றி எனக்கே கவலை இல்லை… உனக்கு என்ன கவலை என்றது.

பென்சில்‌: இல்ல… எனக்காக உன்னையே அழித்து, நான்‌ சுத்தமாக இருக்க நீ உன்னை முற்றிலுமாக தந்து விடுகிறாய்‌ அது தான்‌ எனக்கு வருத்தம்‌. இப்பொழுது புரிந்து கொண்டேன்‌! நீ உன்னை அழித்தால்‌ தான்‌ பென்சிலாகிய நான்‌ சுத்தமாக, சரியாக வேலைகளை செய்ய முடியும்‌. ஆகவேதான்‌ நீ உன்னை அழித்துக்‌ கொண்டதை புரிந்துகொண்டேன்‌ என்றது.

ஆமா குட்சஸ்‌, பாத்தீங்களா! நீங்க தினமும்‌ பயன்படுத்துறீங்களே அந்த ரப்பர்‌, பென்சில்‌ பற்றி… பென்சில்‌ தன்னுடைய வேலையை சுரியாக சுத்தமாக செய்ய வேண்டுமானால்‌, ரப்பர்‌ தன்னை கரைத்து, அதை அழித்து போட்டால்‌ தான்‌ முடியும்‌.

அதுபோலத்‌ தான்‌ குட்டீஸ்‌!  நீங்க கூட நிறைய நேரத்திலே தவறுகள்‌ செய்திருப்பீங்க, நம்முடைய தவறுகளை மன்னிப்பதற்காக தான்‌ இயேசப்பா நம்முடைய பாவங்களை, அக்கிரமங்களை நீக்கி நம்மை சுத்தப்படுத்துவதற்காக தான்‌ அவர்‌ கல்வாரி சிலுவையில்‌ தன்னையே அழித்து, ஒரு சொட்டு ரத்தம்‌ கூட தன்னுடைய சரீரத்தில்‌ இல்லாமல்‌ தன்னையே விட்டூக்கொடுத்தார்‌.

யாருமே நமக்காகத்‌ தன்‌ உயிரை கொடுக்கவே முடியாது. நம்ம இயேசப்பா தான்‌ இப்படி நம்‌ மேல்‌ வைத்த அன்பினால்‌, அவரையே நமக்காக தந்தார்‌. நீங்க பரிசுத்தமாக காக்கப்பட வேண்டுமன்றால்‌ இயேசப்பாவை உங்க சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. அதனால இயேசப்பாவ உங்க சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்க குட்டீஸ்‌…

Click Here To Read More Tamil Christian Kids Stories

(Visited 26 times, 1 visits today)

Leave a Reply

You do not have to leave an email address in order to reply.