வேதத்தை வாசி நீ விசுவாசி

வேதாகம ஆசிரியர் ஒருவர் தன்னுடைய கிழிந்து போன வேதாகமத்தை தூக்கி பிடித்து கொண்டு, ‘ஒவ்வொரு விசுவாசியும் வேதாகமத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒவ்வொரு வேதாகமத்தையும் சேதப்படுத்த வேண்டும்’ என்றார். நம்முடைய வேதாகமங்கள் படிப்படியாக தாமாகவே கிழிந்து போகும் அளவிற்கு நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்.

பாவத்தினால் தன் மனதை சேதப்படுத்தியவன், சேதமடையாத புத்தம் புதிய வேதாகமத்தை வைத்திருப்பான். சேதமடைந்த கிழிந்த வேதாகமத்தை வைத்திருப்பவனது மனதோ, பாவத்தினாலும் எவ்வித குற்ற உணர்வினாலும் சேதமடையாமல் பாதுகாப்பாய் இருக்கும். ஆம், நாம் ஆர்வமாய் வேதத்தை வாசிக்கிறவர்களாக இருப்பவர்களானால் நாம் சேதமடைவதற்கு பதிலாக நமது வேதாகமம் சேதமடையும்.

நமது பாவத்தை உணர்த்தி, மனச்சாட்சியை கூர்மையாக்கி நம்மை உணர்வுளளவர்களாக மாற்றும் உயிருள்ள வார்த்தைகளடங்கிய புத்தகமே நம் வேதாகமம். தினமும் நேரமிருந்தால் மட்டுமே வாசிப்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் வாசிப்பவர்கள் வரிசையில் நாம் இருப்போமானால், நம் நிலை பரிதாபமே! பாவமான காரியங்களை காந்தம் போல இழுக்கும் சக்தி வாய்ந்த நம் கண்களுக்கு வேத வசனம் என்னும் கலிங்கம் அனுதினமும் கட்டாயம் தேவை.

குடும்பத்தில் அன்றாடம் அப்பியாசிக்க வேண்டிய அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை கற்றுத்தரும் வேதம் நமக்கு அனுதினமும் முதல் ஆசிரியராக இருந்தால் நம் குடும்பம் குட்டி பரலோகமாக மாறிவிடும். ‘நான் ஆண்டவருக்கென்று ஊழியம் தானே செய்கிறேன்’ என்று ஊழிய வேலையில் மும்முரமடைந்து வேதத்தை மறந்து பின, பின்மாற்றமடைந்த ஊழியர்கள் ஏராளம்.

இந்த சாத்தானின் வஞ்சக வார்த்தையை புரிந்து கொண்டு, தேவனுக்கும் அவரது வார்த்தைக்கும் முதலிடம் கொடுக்கும் ஊழியனை பார்த்துதான், ‘உண்மையும் உத்தமுமான ஊழியனே, நீ கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய், உன்னை அநேகத்திற்கு அதிபதியாக்குவேன்’ என்று தேவன் கூற மடியும்.

பிரியமானவர்களே, உங்களது நிலைமையும் உங்கள் வேதாகமத்தின் நிலைமையும் என்ன? சிலரது திருமண வேதாகமம் வருடங்கள் பல கடந்தும் புத்தம் புதிதாக ஒட்டிய பக்கங்கள் கூட பிரிக்கப்படாமல் காணப்படும். வாழ்க்கை துணை வந்தவுடன், ஆத்தும நேசரை மறந்து விடுவர். ‘ நீ என் வேதத்தை மறந்தால் நான் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்’ என்ற வசனம் என்றும் உங்கள் நினைவிலிருக்கட்டும். நீங்கள் வேத வசனத்தை உங்கள் இதயத்தில் சுமந்தால் உங்கள் சோதனை, வேதனை, வியாதி, வியாகுலம் கண்ணீர் நேரத்தில் வேதம் உங்களை சுமக்கும்.

இத்தனை வருடங்கள் கிறிஸ்தவராக வாழ்ந்தும் வேதம் முழுவதையும் ஓருமுறை கூட வாசிக்காதவரா நீங்கள்? இன்றே ஒரு புதுவருட தீர்மானமெடுங்கள். வேதத்தோடு ஒரு பேனாவை இணைத்து வையுங்கள். உங்களோடு பேசும் வசனங்களை கோடிடுங்கள். புரியாத வசனங்களை குறித்து வைத்து நல்ல வேத அறிவு உள்ளவர்களிடம் கேட்டு தெளிவடையுங்கள். நீங்கள் படித்து படித்து உங்கள் வேதாகமம் பழுதடைந்திருந்தால், உங்கள் வாழ்க்கை சேதமடையாது.

வயது முதிர்வயதில் உங்கள் அவயங்கள் பெலமிழந்தாலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கிரீடமாகவே திகழ்வீர்கள். ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்’ – (சங்கீதம் 1:2-3) என்ற கர்த்தருடைய வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறுவதாக! ஆமென் அல்லேலூயா!

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

(சங்கீதம் 119:72).

Similar Searches:
tamil christian bible story, christian bible story in tamil, tamil christian bible stories, christian tamil stories, jesus tamil bible, christian tamil bible, christian tamil books, bible stories tamil pdf, tamil christian bible study pdf, christian tamil story, christian bible story for kids, what is the story of christian, christian books for 10 year olds, story bible examples, what is the christian story of creation, christian bible story, christian bible story in tamil, christian bible story for children, christian bible lesson for kids, christian bible stories for toddlers, christian books for 7 year olds, christian story books for 8-10 year olds, christian books for 7th graders, bibles for 5-7 year olds

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 72 times, 1 visits today)