தாய்‌ சேய் குருவி

ஒரு தாய்‌ குருவி முட்டையிட்டு குஞ்சி பொறித்து, தன்‌ குட்டி குருவிகளை பறக்க வைத்து பழக்கிக்‌ கொண்டிருந்தது. சில நாட்கள்‌ ஆனதும்‌ குட்டி குருவி நன்றாக பறக்க பழகி விட்டது. ஆகவே, தனியாகவே பறந்து பறந்து மேலே சென்று. சந்தோஷத்தில்‌ மிதந்தது.

பிறகு இந்த குட்டி குருவி தேவையில்லாத ஒரு செயலை செய்தது. அதனுடைய கழுத்தில்‌ ஒரு குட்டி “பை” ஒன்று மாட்டியிருந்தது. தன்‌ கண்ணில்‌ படுகிற தேவையில்லாத பொருட்களை பொறுக்கி, தன்னுடைய கழுத்தில்‌ மாட்டியிருந்த குட்டி பையில்‌ போட்டு வந்தது. அந்த பையில்‌ தேவையில்லாத, அதிகமான பொருட்களை போட்ட காரணத்தினால்‌, அந்த சுமைகளை தூக்கிக்‌ கொண்டு பறக்க முடியவில்லை.

கொஞ்சம்‌ பறக்கும்‌, சுமையை தாங்க முடியாததால்‌ கீழே இறங்கி விடும்‌. இப்படி தன்னால்‌ பறக்க முடியாத காரணத்தால்‌, தன்‌ தாய்‌ குருவியிடம்‌ சென்று, என்னால்‌ ஏன்‌ பறக்க முடியவில்லை என்பதாக கேட்டது. தாய்‌ குருவிக்கு ஏன்‌ என்று முதலில்‌ தெரியவில்லை. எங்க பறந்து காண்பி பார்க்கலாம்‌ என்றது. அதனால்‌ பறக்க முடியவில்லை.

தாய்க்குருவி இது என்ன கழுத்தில்‌ என்று கேட்டது. அதற்கு என்னுடைய Bag என்றது. அதில்‌ என்ன இருக்கிறது என்றது. அதற்கு குட்டி குருவி நான்‌ பறந்து செல்லும்போது சந்தோஷத்தில்‌ எல்லாவற்றையும்‌ பொறுக்கி வைத்தேன்‌ என்றது. தேவையில்லாத காரியங்களை எடுத்தால்‌ இப்படி தான்‌ உன்னால்‌ முடியாது. தேவையில்லாததை அகற்றிவிட்டு, பறக்கும்‌ போது தான்‌, உன்னால்‌ பறக்க முடியும்‌. இனிமேல்‌ பறந்து பார்‌ என்றது. உடனே சந்தோஷமாக மேலே நோக்கி பறந்தது.

பாத்தீங்களா குட்டீஸ்‌! நீங்களும்‌ அப்படி தான்‌. தேவையில்லாத காரியங்களை இருதயத்தில்‌ சுமந்து கொண்டு இருந்தால்‌, மனதில்‌ வைத்திருந்தால்‌ உன்னால்‌ மேலே மேலே செல்ல முடியாது. எல்லாவற்றையும்‌ குப்பை என்று ஒதுக்கி, உண்மையான இருதயத்தோடு இயேசப்பா துணையோடு நீ முன்னேறிச்‌ செல்லலாம்‌. உன்னாலும் மேலே உயர முடியும் குட்டீஸ்‌.

Click Here To Read More Tamil Christian Kids Stories

(Visited 11 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *