கிறிஸ்தவர்கள் உபவாசிக்க வேண்டும் என்று வேதம் கட்டளையிடவில்லை. தேவனும் கிறிஸ்தவர்கள் உபவாசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறதுமில்லை. அதே சமயம், உபவாசம் நல்லது, பயனுள்ளது, பிரயோஜனமானது என்று வேதாகமம் சொல்லுகிறது.
Click Here To Read All Bible Question & Answers
விசுவாசிகள் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பாக உபவாசிக்கிறதை அப்போஸ்தலர் புத்தகம் பதிவு செய்கிறது (அப்போஸ்தலர் 13:2; 14:23). உபவாசமும், ஜெபமும் பெரும்பாலும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன (லூக்கா 2:37; 5:33). உபவாசம் என்பது தேவனுக்கும், நமக்கும், அவருடனான நமது உறவில் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் ஒரு வழியாகும்.
உபவாசம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குட்பட்டதாய் இருக்க வேண்டும், குறிப்பாக உணவை நாம் ஒதுக்கிவைத்து உபவாசிக்கும்போது. உணவில்லாமல் அதிக நாட்கள் அல்லது காலம் உபவாசமாக இருப்பது நம் சரீரத்திற்கு ஆபத்தானதாகும். உபவாசம் என்பது மாம்சத்தை தண்டிப்பதற்காக அல்ல, மாறாக நமது கவனத்தை தேவனிடம் திருப்புவதற்காக. உபவாசம் என்பதை ஒரு “உணவு கட்டுப்பாட்டு முறை” எனக் கருதிவிடக்கூடாது.
வேதாகமம் கூறுகிற உபவாசத்தின் நோக்கம் உடல் எடையை குறைப்பது அல்ல, மாறாக தேவனுடன் ஆழமான உறவைப் பெறுவது. யார் வேண்டுமானாலும் உபவாசம் இருக்கலாம். ஒரு சிலரால் உணவை ஒதுக்கிவைத்து உபவாசிக்க முடியாமல் போகலாம் (உதாரணமாக, நீரிழிவு நோயாளிகள்). தேவனோடு கிட்டிச் சேருவதற்காக தற்காலிகமாக சில காரியங்களை எல்லோராலும் விட முடியும்.
உபவாசம் என்பது நமக்கு வேண்டிய காரியங்களை தேவனைக்கொண்டு செய்யவைக்கின்ற ஒரு வழி அல்ல. உபவாசமானது நம்மைத்தான் மாற்றுகிறது, தேவனை அல்ல. உபவாசம் என்பது மற்றவர்களைக் காட்டிலும் நம்மை மிகுந்த ஆவிக்குரியவர்களாக காண்பித்துக்கொள்வதற்காக அல்ல, தாழ்மையுள்ள ஆவியோடும் மகிழ்ச்சியான மனதோடும் நாம் உபவாசிக்க வேண்டும்.
மத்தேயு 6:16-18 கூறுகிறது, “நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்”.