ஆதியாகமம் 2:23-24-ல், திருமணம் தோற்றுவிக்கப்பட்டதை பைபிள் பதிவு செய்கிறது, “அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

Click Here To Read All Bible Question & Answers

தேவன் மனிதனைப் படைத்தார், பின்னர் அவருக்குத் துணையாக பெண்ணைப் படைத்தார்.  மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல (ஆதியாகமம் 2:18) என்று கண்டு, தேவன் இதற்கு ஒரு “தீர்வாக” விவாகத்தை ஏற்படுத்தினார். தேவன் ஏவாளை ஆதாமுடன் சேர்ந்து அவனுடைய “மற்ற பாதியாக” அவனுடைய உதவியாளராக இருக்கப் படைத்தார்.

விவாகம் செய்வதினால் ஒரு மனிதனும் மனுஷியும் “ஒரே மாம்சமாகிறார்கள்.” இந்த ஒருமை மிக முழுமையாக பாலியல் உறவில் வெளிப்படுத்தப்படுகிறது. புதிய ஏற்பாடு இந்த ஒருமைப்பாட்டைப்பற்றி சொல்லும்போது நம்மை எச்சரிக்கிறது: “இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்” (மத்தேயு 19:6).

பவுலின் பல நிருபங்கள் திருமணத்தையும், திருமண உறவில் விசுவாசிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகின்றன. அத்தகைய ஒரு பகுதி எபேசியர் 5:22-33 ஆகும் . இந்த பகுதியை வாசிக்கும்போது, விவாகம் எவ்வகையில் இருக்கவேண்டும் என்று வேதாகமம் கூறுகிற சில திறவுகோல் சத்தியங்களை நாம் காணமுடியும்.

ஒரு வெற்றிகரமான வேதாகம விவாகத்திற்கு எபேசியர் 5ஆம் அதிகாரத்தில் புருஷனும் மனைவியும் நிறைவேற்றுவதற்கான சில பங்குகள் இருக்கின்றன என்று கூறுகிறது “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்.” ( எபேசியர் 5:22-25 ).

தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” ( எபேசியர் 5:28-29 ). “இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (எபேசியர் 5:31 ).

விசுவாசியான கணவனும் மனைவியும் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவாகத்தைக்குறித்ததான தேவனுடைய பிரமாணங்களைப் பின்பற்றுவதின் மூலம், ஒரு நிலையான, ஆரோக்கியமான விவாகத்தை அமைத்துக்கொள்ள முடியும். 

வேதாகம அடிப்படையிலான திருமணம் கிறிஸ்துவை ஆணுக்கும் மனைவிக்கும் தலையாக வைத்திருக்கும். திருமணத்தை பற்றிய வேதத்தின் கருத்து கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான ஒற்றுமையை உள்ளடக்கியது, இது கிறிஸ்துவும் அவரது சபைக்கும் இடையேயுள்ள ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

(Visited 245 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *