பொட்டு (பிந்தி) தெற்கு ஆசியா, (குறிப்பாக இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை) மற்றும் தென்கிழக்காசியாவில் நெற்றியில் அணியும் ஒரு வகை அலங்காரமாகும். இந்தியாவில், ஒரு இந்து பெண் திருமணமானவர் என்பதை குறிக்க பொட்டு பயன்படுத்தப்பட்டது.

தற்போது அநேகர் அழகுக்காக பொட்டுவைக்கின்றனர் (கத்தோலிக்க பிரிவை பின்பற்றும் ஒரு சில கிறிஸ்தவ பெண்கள் கூட பொட்டு வைக்கிறார்கள்). பொட்டு வைப்பது பொதுவாக இந்துக்களின் பழக்கவழக்கம் என்ற கருத்து நிலவுவதால், கிறிஸ்தவர்கள் பொட்டு வைக்காமல் இருப்பதன் மூலம் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்கின்றனர்.

Click Here To Read All Bible Question & Answers

பிந்தி (பொட்டு) என்பது ஒரு பெண் சார்ந்த சாதி அல்லது பிரிவையும் குறிக்கும் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன் ஆன்மீக மற்றும் மத அர்த்தத்தையும் கொண்டுள்ளது. உடலின் அலங்காரங்களில், பிந்தி வலுவான மத உட்பொருளாகக் கருதப்படுகிறது.

பிந்தி என்பது ஒரு தனிநபரின் “ஆன்மீகக் கண்ணை” குறிக்கிறது, ” மூன்றாவது கண் ” என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆன்மீக பார்வை அளிக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். மூன்றாவது கண் மூலம், இந்துக்கள் தங்கள் உடல் கண்களால் பார்க்க முடியாததைக் கண்டு, அசாதாரணமான கண்ணோட்டத்தைப் பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

இந்து குருக்கள் மற்றும் துறவிகள் தங்கள் ஆற்றலை ஆன்மீகக் கண்ணில் செலுத்துவதன் மூலம் தியானம் செய்கிறார்கள். ஒரு நபரின் ஆன்மீகக் கண் திறக்கும் போது, ​​அவர் உண்மையான அறிவொளியை அடைவார் மற்றும் அவர் எந்த கடவுளை அடைய முயற்சிக்கிறார்களோ அந்த கடவுளை நெருங்குவார் என்று நம்பப்படுகிறது. பிந்தி ஆறாவது சக்கரத்தின் மேல் அமைந்துள்ளது, இது மனித உடலில் உள்ள மன “ஆற்றல் புள்ளிகளில்” ஒன்றாக கருதப்படுகிறது.

இவ்வாறு, ஒரு பிந்தி மந்திர தியானத்துடன் தொடர்புடைய செறிவூட்டப்பட்ட, இரகசிய ஞானத்தின் தொடர்பைக் குறிக்கிறது. பிந்திகள் புத்தியைச் சுத்தப்படுத்துவதாகவும், செறிவு திறன்களை மேம்படுத்துவதாகவும், ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வதாகவும், நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், தீய சக்திகளை விரட்டுவதாகவும் கருதப்படுகிறது.

சிவப்பு நிறம் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக கூறப்படுகிறது. பிந்தி என்பது அழகை மேம்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.  சில பெண்கள் நிரந்தர பிந்திக்காக தங்கள் நெற்றியில் பச்சைக் குத்தி கொள்கிறார்கள்.

இந்து கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது, மேலும் அனைத்து இந்திய பழக்கவழக்கங்களும் ஏதோவொரு வகையில் அவர்களின் கடவுள்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் சில சமயங்களில் சிலுவை கொண்ட செயின் மற்றும் மோதிரம் அணிவது போல, இந்துக்கள் அல்லாதவர்கள் சில சமயங்களில் பொட்டு வைக்கிறார்கள். 

பைபிள் பொட்டு வைக்கவேண்டும் என்று எங்கும் கூறவில்லை. ஆனால் இந்து மதம் அதை காட்டாயமாக வைக்க வேண்டும் என போதிக்கிறது. பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக்­ காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு.

யோகா பொட்டு வைக்க சொல்கிறது. இந்த யோகா ஒரு விக்கிரக ஆராதனையை அடிதளமாக கொண்டவை ஆகும். இது வேதத்திற்க்கு முரனான கொள்கை கொண்டதாகும். பைபிள் அல்ல யோகா சாஸ்திரமே பொட்டு வைக்க சொல்கிறது. யோகா சாஸ்த்திரம் சொல்வதை அல்ல, பைபிள் சொல்வதை செய்கிறவனே கிறிஸ்தவன்.

இந்த காரணத்திற்காக, ஒரு கிறிஸ்தவ பெண் பொட்டு வைப்பதை பற்றி  பைபிள் என்ன கூறுகிறது என்று பார்க்க வேண்டும். வேதாகமத்தில் பல விஷயங்கள் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதற்கு ஒத்துப்போக கூடிய பல வசனங்கள் உள்ளன.

2 கொரிந்தியர் 6:16ல், பவுல் கூறுகிறார்” தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் (மற்ற மதத்தினர்) நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”.

நெற்றிக்கு பொட்டு இட்டுக் கொள்வது “Religious Mark ” (சமயச் சின்னம்) ஆகும்.  விக்கிரகாராதனை விஷயத்துடன் கிறிஸ்தவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்கக்கூடாது. பூஜையிலிருந்து வரும் குங்குமம், விபூதியும் வேண்டாம். அவைகளினால் விக்கிரக ஆராதனையில் பங்குபெற்றதாகிவிடும்.

பைபிளில் கண்களுக்கு மையிடுதல் பற்றி மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.
•  II இராஜாக்கள் 9:30ல், யேசபேல் என்பவள் (வேதத்தில் கூறப்பட்டுள்ள மிகவும் மோசமான மனைவிகளில் ஒருத்தி) தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்தாள்; ஆனால் அன்றே அவள் செத்தாள் என்று அதே அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

• எரேமியா 4:30ல், பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.

•  எசேக்கியேல் 23:40லும் வாசிக்கிறோம்.

இங்கே மையிடும் சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு தீமையாகவே முடிகிறது. நன்மை என்று சொல்லப்படவில்லை. ஒருவர் பொட்டுவைக்க, கண்களிலிட, ஏன் செய்வினை, பில்லிசூனியம் செய்யவும்கூட “மை” பயன்படுத்துகிறார்கள். பொட்டு ஒரு அடையாளத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது, இப்போது அது தேவையில்லை. கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பது இல்லை. பைபிளில் அந்தப் பழக்கம் இல்லை. எனவே பொட்டு வைக்கவேண்டாம்.

எரேமியா 10:2 கூறுகிறது, “புற மதத்தார் மார்க்கத்தை கற்றுக் கொள்ளாதிருங்கள்”. மார்க்கம் என்றால் வழி. நம் வழி இயேசு கிறிஸ்துவின் வழி. இரட்சிக்கப்பட்டது இயேசு கிறிஸ்துவின் நாமத்தால்.

நாம் அவர்கள் வழியை பின்பற்றுவதில்லை. நமக்கும் தேவன் ஒரு அடையாளத்தை நெற்றியில் வைத்திருக்கிறார். அது சிலுவையின் குறி. ஆவிக்குரிய குறி. யாருக்கும் தெரியாது. தேவ தூதர்கள் மாத்திரமே அறிவார்கள். ஆக நாம் ஆவிக்குரிய சிலுவை பொட்டு நம் அடையாளம். நாம் வைக்கும் உலக பொட்டு வெறும் அழகிற்க்கே. ஆவிக்குரிய பொட்டே நம் நித்ய அழகு.

பைபிள் பொட்டு வை என்றும் சொல்லவில்லை வைக்காதே என்றும் சொல்லவில்லையே என்று கூறலாம். ஆனால் அதை காட்டாயம் வைக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது. பல தெய்வ வழிபாட்டின் கொள்கையை எப்படி பைபிள் ஏற்றுக்கொள்ளும் ஆக கிறிஸ்தவர்கள் பொட்டுவைக்க கூடாது.

(Visited 12 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *