
மருத்துவ உதவியை நாடுவது தேவ விசுவாசமின்மையை வெளிப்படுத்துவதாக சில கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். சிலர் மருத்துவரின் உதவியை நாடுவது சில நேரங்களில் தேவன் நமக்கு நம்மை சுகப்படுத்தும்படியாக கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆற்றலை பயன்படுத்துவதற்கு தடையாகவே கருதப்படுகிறது என்கிறார்கள்.
Click Here To Read All Bible Question & Answers
உங்கள் கார் சேதமடைந்தால், நீங்கள் அதை ஒரு மெக்கானிக்கிடம் எடுத்துச் செல்வீர்களா அல்லது தேவன் ஒரு அதிசயம் செய்து உங்கள் காரை சரிசெய்வதற்காக காத்திருப்பீர்களா? உங்கள் வீட்டில் உள்ள குழாய்கள் வெடித்துவிட்டால், அந்த கசிவை தேவன் அடைக்கும் வரை நீங்கள் காத்திருப்பீர்களா அல்லது பிளம்பரை அழைப்பீர்களா? தேவன் நம் உடலைக் குணப்படுத்துவதைப் போலவே காரைப் பழுதுபார்ப்பதிலும் அல்லது குழாய்களைச் சரிசெய்வதிலும் வல்லவர்.
தேவனால் குணப்படுத்தும் அற்புதங்களைச் செய்ய முடியும் ஆனால் நமக்கு உதவிசெய்ய கூடிய அறிவும் திறமையுமுள்ள தனிநபர்களை நாடுவதற்கு பதிலாக எப்பொழுதும் அற்புதத்தை எதிர்பார்க்க கூடாது.
பைபிளில் மருத்துவர்களை பற்றி பன்னிரண்டு முறைக்கும் மேலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் மருத்துவர்களிடம் செல்லக்கூடாது என்று போதிக்கும் சூழலில் இருந்து எடுக்கக்கூடிய ஒரே வசனம் 2 நாளாகமம் 16:12 ஆகும். ஆசா தனது ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் காலில் ஒரு நோயால் பாதிக்கப்பட்டார்.
அவருடைய நோய் கடுமையாக இருந்தபோதிலும், நோயின் போதும் அவர் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை, மருத்துவர்களிடம் மட்டுமே உதவி கோரினார். ஆசா மருத்துவர்களை கலந்தாலோசித்தது அல்ல, ஆனால் “அவர் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை” என்பதே பிரச்சினை. ஒரு டாக்டரைப் பார்க்கும்போது கூட, நமது இறுதி நம்பிக்கை கர்த்தரில் இருக்க வேண்டும், மருத்துவரிடம் அல்ல.
கட்டுகள் (ஏசாயா 1:6), எண்ணெய் (யாக்கோபு 5:14), எண்ணெய் மற்றும் திராட்சை ரசம் (லூக்கா 10:34), இலைகள் (எசேக்கியேல் 47:12), திராட்சரசம் போன்ற “மருத்துவ சிகிச்சைகள்” பயன்படுத்துவதைப் பற்றி பேசும் பல வசனங்கள் உள்ளன. மேலும், அப்போஸ்தலர் மற்றும் லூக்கா நற்செய்தியின் ஆசிரியரான லூக்கா, பவுலால் “பிரியமான மருத்துவர்” (கொலோசெயர் 4:14) என்று குறிப்பிடப்படுகிறார்.
மாற்கு (5:25-30)-ல், தொடர்ச்சியான இரத்தப்போக்கினால் சிரமப்பட்ட ஒரு பெண்ணின் கதையை விவரிக்கிறது, அவள் பலரிடம் சென்றும், அவளுடைய பணத்தைச் செலவழித்தும் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத ஒரு பிரச்சனை. இயேசுவிடம் வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டால், அவள் குணமாகிவிடுவாள் என்று நினைத்தாள்; அவள் அவருடைய வஸ்திரத்தின் விளிம்பைத் தொட்டாள், அவள் குணமானாள்.
இயேசு ஏன் பாவிகளோடு நேரம் செலவிடுகிறார் என்று பரிசேயர்கள் கேட்ட போது அவர் “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார்” (மத்தேயு 9:12).
இந்த வசனங்களிலிருந்து ஒருவர் பின்வரும் கொள்கைகளைப் பிரித்தெடுக்கலாம்:
1) மருத்துவர்கள் தேவன் அல்ல, அவர்களை அப்படிப் பார்க்கக் கூடாது. அவர்கள் சில சமயங்களில் உதவலாம், ஆனால் அநேக நேரங்களில் பணத்தை பிடுங்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
2) மருத்துவர்களைத் தேடுவது மற்றும் “பூமிக்குரிய” வைத்தியங்களைப் பயன்படுத்துவது வேதத்தில் கண்டிக்கப்படவில்லை. உண்மையில் மருத்துவ சிகிச்சை நல்லதாகவே பார்க்கப்படுகிறது.
3) எந்தவொரு சரீர பலவீனமாக இருந்தாலும் தேவனுடைய தலையீடு தேடப்பட வேண்டும் (யாக்கோபு 4:2; 5:13). நாம் எப்போதும் விரும்பும் விதத்தில் அவர் பதிலளிப்பார் என்று அவர் வாக்களிக்கவில்லை (ஏசாயா 55:8-9), ஆனால் தேவன் எல்லாவற்றையும் அன்பின் மூலம் மற்றும் நம்முடைய நலனுக்காகவே செய்கிறார் என்ற நிச்சயம் நமக்கு இருக்கிறது (சங்கீதம் 145:8-9).
எனவே, கிறிஸ்தவர்கள் மருத்துவர்களிடம் செல்ல வேண்டுமா? கடவுள் நம்மை அறிவார்ந்த மனிதர்களாகப் படைத்தார், மேலும் மருந்துகளை உருவாக்கும் திறனையும், நம் உடலை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் கற்றுக் கொடுத்தார். இந்த அறிவையும் திறனையும் உடல் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. மருத்துவர்களை தேவன் நமக்கு அளித்த பரிசாகக் கருதலாம், இதன் மூலம் தேவன் குணமடைவதையும் மீட்டெடுப்பதையும் தருகிறார்.
அதே நேரத்தில், நமது இறுதி நம்பிக்கை தேவன் மீது இருக்க வேண்டும், மருத்துவர்கள் அல்லது மருத்துவத்தில் அல்ல. “கேட்கிற யாவருக்கும் ஞானத்தை சம்பூரணமாய் கொடுப்பேன் என்று வாக்குபண்ணின தேவனிடத்தில் இப்படிப்பட்ட கடினமான தீர்மானங்களை எடுக்க நாம் தேட வேண்டும்” (யாக்கோபு 1:5).