நம் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் தேவனுடைய சித்தத்தை அறிவது மிக முக்கியம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்று இயேசு கூறினார் (மாற்கு 3:35). 

Click Here To Read All Bible Question & Answers

இரண்டு குமாரர்களைக் குறித்த உவமையில், பிதாவினுடைய சித்தத்தை செய்ய தவறிய பிரதான ஆசாரியர்களையும் மூப்பர்களையும் இயேசு கடிந்து கொள்ளுகிறார் (மத்தேயு 21:32). தேவனுடைய சித்தம் நமது பாவத்திலிருந்து மனந்திரும்புவதும், கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதும் ஆகும். நாம் அந்த முதல் படியை எடுக்கவில்லை என்றால், நாம் இன்னும் தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

நாம் கிறிஸ்துவை விசுவாசத்தினாலே ஏற்றுக்கொண்டவுடன், நாம் தேவனுடைய பிள்ளைகளாக்கப்பட்டோம் (யோவான் 1:12), மேலும் அவர் நம்மை அவருடைய வழியில் நடத்த விரும்புகிறார் (சங்கீதம் 143:10). தேவன் தம்முடைய சித்தத்தை நம்மிடமிருந்து மறைக்க முயற்சிக்கவில்லை; அவர் அதை வெளிப்படுத்த விரும்புகிறார். 

நாம் எல்லா சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்த வேண்டும்; இதுவே உங்களைப் பற்றிய தேவனுடைய சித்தமாயிருக்கிறது  (1 தெசலோனிக்கேயர் 5:18). நாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் (1 பேதுரு 2:15). மேலும் “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 4:3)

ரோமர் 12:2 கூறுகிறது, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”.  இந்தப் பகுதி நமக்கு ஒரு முக்கியமான விஷத்தை கற்று தருகிறது, ஒரு தேவனுடைய பிள்ளை இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் இருக்கவேண்டும்.  தேவனுடைய காரியங்களின்படி அவனுடைய மனம் புதுப்பிக்கப்படுகையில், அவன் தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிய முடியும்.

தேவனுடைய சித்தத்தை அறிவது சில சமயங்களில் கடினமாக இருக்கும், ஏனென்றால் அதற்கு பொறுமை தேவை. நமக்கு இருக்கிற ஒரு பிரச்னை என்னவென்றால், தேவனுடைய சித்தம் அனைத்தையும் ஒரே சமயத்தில் தெரிந்துகொள்ள விரும்புவது ஆகும், ஆனால் தேவன் அவ்வாறு செயல்படுவதில்லை, அவர் விரும்புகிறபடி அவர் விரும்புகிற காரியங்களில் அவருடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். 

பெரும்பாலும், தேவன் நாம் என்ன வேலை செய்வது, எங்கு வாழ்வது, யாரை திருமணம் செய்வது, என்ன கார் வாங்குவது போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பதற்கு அனுமதிக்கிறார், அதேவேளை நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து அவர் விரும்புகிறபடி இருப்போமானால் தவறான தெரிவுகளை தேர்ந்தெடுப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கிறார் (அப்போஸ்தலர் 16:6-7 ).

ஒரு நபரை நாம் அதிகமதிகமாக தெரிந்துகொள்ளும்போது, அவருக்கு என்னென்ன காரியங்கள் பிடிக்கும் என்பதை சுலபமாக அறிந்து கொள்கிறோம். உதாரணமாக, ஒரு சிறுவன் மிகவும் பரபரப்பாக இருக்கும் ஒரு தெருவில், ஒரு பந்து எழும்பி போவதை காணலாம், உடனே அதன் பின்னால் போகவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் “என் அப்பா அதை செய்ய விரும்பவில்லை” என்று அவன் அறிந்திருக்கிறான்.

ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவன் தனது தந்தையிடம் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை; அவனுடைய அப்பா என்ன சொல்வார் என்று அவனுக்குத் தெரியும், ஏனென்றால் அவனுக்குத் தன் அப்பாவைத் தெரியும். தேவனுடனான நமது உறவிலும் இதுவே உண்மை.

நாம் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது,  நமக்கு கிறிஸ்துவின் சிந்தையை தேவன் கொடுக்கிறார் (1 கொரிந்தியர் 2:16). நாம் அவரை அறிவோம், அது அவருடைய சித்தத்தை அறிய உதவுகிறது. கடவுளுடைய வழிகாட்டுதல் எளிதில் கிடைப்பதைக் காண்கிறோம். “உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்” (நீதிமொழிகள் 11:5).

நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரருடைய சித்தத்தை உண்மையாகவே விரும்பினால், தேவன் அவருடைய விருப்பங்களை நம் இருதயங்களில் வைப்பார். முக்கியமானது தேவனுடைய சித்தத்தை விரும்புவது, நம்முடைய சொந்த விருப்பத்தை அல்ல. “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4).

(Visited 63 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *