இந்தக் கேள்விக்கான பதில் “ஒன்றாக வாழ்வது” என்பதன் பொருள் என்ன என்பதைப் பொறுத்தது. “ஒன்றாக வாழ்வது” என்பது ஒரே வீட்டை அல்லது குடியிருப்பைப் பகிர்ந்துகொள்வதைக் குறிக்கிறது என்றால், எந்த பாலியல் அர்த்தமும் இல்லாமல், அது தொழில்நுட்ப ரீதியாக தவறாக இருக்காது. சரியாகச் சொல்வதானால், திருமணமாகாத ஆணும், திருமணமாகாத பெண்ணும் ஒரே வீட்டில் அல்லது குடியிருப்பில் வசிப்பதில் பாவம் எதுவும் இல்லை, பாலியல் உறவுகள் வைத்துக்கொள்ளாத வரை.
Click Here To Read All Bible Question & Answers
பொதுவாக லிவிங் டுகெதர் என்பது, ஒன்றாக வாழ்வது அல்லது ஒரு வீட்டைப் பகிர்ந்துகொள்வது மற்றும் உடலுறவு கொள்வது என்று வரையறுக்கப்படுகிறது. லிவிங் டுகெதர் என்ற வரையறையைப் பயன்படுத்தினால், அது நிச்சயமாகத் தவறு. திருமணத்திற்கு முந்தைய பாலுறவு மற்ற எல்லா வகையான பாலியல் ஒழுக்கக்கேடுகளும் வேதத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது (அப்போஸ்தலர் 15:20; ரோமர் 1:29; 1 கொரிந்தியர் 5:1; 6:13, 18; 7:2; 10:8; 2 கொரிந்தியர் 12: 21; கலாத்தியர் 5:3; 1 தெசலோனிக்கேயர் 4:3-5).
திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது விபச்சாரம் மற்றும் பிற வகையான பாலியல் ஒழுக்கக்கேடுகளைப் போலவே தவறானது. ஏனெனில் அவை அனைத்தும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாத ஒருவருடன் உடலுறவு கொள்வதை உள்ளடக்கியது. திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழும் தம்பதிகளை ஆதரிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம்.
ஒன்றாக வாழ்வதை ஏற்றுக்கொள்வது நடைமுறையில் உள்ள கிறிஸ்தவர்களிடையே கூட காணப்படுகிறது, ஒன்றாக வாழ்வதை அங்கீகரிக்கும் தற்போதைய போக்குகள் இருந்தபோதிலும், பைபிளின் செய்தி அப்படியே உள்ளது. திருமணத்திற்கு முன் உடலுறவை தேவன் வெறுக்கிறார் .
உடலுறவு கொள்ளாமல், வாழும் இடத்தைப் மட்டும் பகிர்ந்து கொள்ளும் திருமணமாகாத தம்பதியினரின் விஷயத்தில் கூட, சில சிக்கல்கள் எழுகின்றன:
1) இன்னும் ஒழுக்கக்கேட்டின் தோற்றம் உள்ளது. நாம் கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதால், அவிசுவாசியான உலகத்திற்கு முன்பாக நம்முடைய சாட்சியைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வாழ்க்கை இடத்தைப் பகிர்ந்துகொள்வது பாலியல் உறவில் இருப்பதாக பெரும்பாலான மக்கள் இயல்பாகவே கருதுகின்றனர். அனுமானம் தவறாக இருந்தாலும், உட்பொருள் அப்படியே இருக்கும். தேவன் நம்மை ஒரு உயர்ந்த தரத்திற்கு அழைக்கிறார். “மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.” (எபேசியர் 5:3). ஒன்றாக வாழ்வது நிச்சயமாக பாலியல் ஒழுக்கக்கேட்டை குறிப்பிடுகிறது.
2) வாழும் இடத்தைப் பகிர்வது ஒழுக்கக்கேடுக்கான மிகப்பெரிய சோதனையாக இருக்கலாம். இணைந்து வாழும் தம்பதிகள், தாங்கள் உடலுறவில் இருந்து விலகியிருந்தாலும், பிசாசு அவர்களைத் தூண்டுவதற்கு அனுமதிக்கும் நிலையில் தங்களைத் தாங்களே நிறுத்திக் கொள்கிறார்கள். ஒழுக்கக்கேடுகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” (1 கொரிந்தியர் 6:18).
3) கிறிஸ்துவில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கும், நமக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நாம் யாரையும் இடறலடையச் செய்ய மாட்டோம் என்பது தான் அது (ரோமர் 14:19-21). நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சொன்னால் மட்டும் போதாது. நாம் அமைதிக்காகவும், பரஸ்பர மேம்பாட்டிற்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு ஜோடி திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வாழும் போது பாவத்தில் வீழ்ந்துவிட அதிக வாய்ப்புண்டு. தீய தோற்றம் அளிக்கும் காரியங்களை தவிர்ககவும், பாவத்திற்கு விலகி ஓடவும், மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்காமல் இருக்கவும் வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது (1 தெசலோனிக்கேயர் 5:22; எபேசியர் 5:3). ஆகவே, ஒரு ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது என்பது தேவனைக் கனப்படுத்துகிற செயலல்ல.