இணையத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தைகள் ஆபாசத்துடன் தொடர்புடையவை. இன்று உலகில் ஆபாசப் படங்கள் தலைவிரித்தாடுகின்றன. வேறு எல்லாவற்றிற்கும் மேலாக, பாலியல் உறவை மட்டும் சாத்தான் அதிகமாய் கெடுத்து அதை அசுத்தமானதாக மாற்றி இருக்கிறான். சாத்தான் நல்லதையும் சரியானதையும் எடுத்துக் கொண்டான் (கணவன்-மனைவிக்கு இடையேயான அன்பான பாலுறவு) மற்றும் அதை காமம், ஆபாசம் மற்றும் பிற பாவங்களால் மாற்றினான்.
Click Here To Read All Bible Question & Answers
ஆபாச படங்களை பார்க்கும் பாவம் மனிதனை அதிக துன்மார்க்கத்துக்கும் ஒழுக்கமற்ற வாழ்க்கைக்கும் நேராக வழிநடத்துகிறது (ரோமர் 6:19 ஐப் பார்க்கவும்). ஆபாச படங்களைப் பார்ப்பது அடிமைப்படுத்தப்படக்கூடிய பழக்கம் என்பது நிச்சயமாய் அறியப்பட்டிருக்கிறது. பாவத்தின் மூன்று முக்கிய வகைகள் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை (1 யோவான் 2:16).
ஆபாசப் படங்கள் பயனர்களுக்கு மாம்சத்தின் மீது இச்சையை ஏற்படுத்துகின்றன, மேலும் இது மறுக்கமுடியாத கண்களின் இச்சையாகும். ஆபாசத்தைப் பார்ப்பது ஒரு பாலியல் பாவம். ஆபாசத்தைப் பார்ப்பது தன்னைப் பற்றிய ஒருவரின் பார்வையை சிதைக்கிறது, போலியான திருப்தியை அளிக்கிறது, எதிர் பாலினத்தின் மதிப்பை தவறாக சித்தரிக்கிறது. ஆபாசப் படங்கள் மூளை, மன ஆரோக்கியம், எதிர் பாலினத்தைப் பற்றிய பார்வை, உணர்ச்சி ஆரோக்கியம் மற்றும் திருமண உறவு ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மற்றவர்களை இச்சிக்கவைப்பதே ஆபாச படங்களின் முக்கிய நோக்கமாகும். இப்படி நம் சிந்தையில் இச்சிப்பது தேவனுக்கு விரோதமான பாவம் (மத்தேயு 5:28). ஒரு மனிதன் ஆபாச படங்களை பார்ப்பதிலிருந்து விலக எந்த முயற்சியும் எடுக்காமல், தேவனுடைய உதவியையும் நாடாமல் அதே பாவக்காரியத்தில் தொடர்ந்து இருந்தால், அது அவன்/அவள் இரட்சிப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது (1 கொரிந்தியர் 6:9-12).
இந்த ஆபாச காட்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு தேவன் அதிலிருந்து விடுதலை மற்றும் வெற்றி கொடுக்கமுடியும். நீங்கள் ஆபாசப் படங்களில் ஈடுபடுகிறீர்களா மற்றும் அதிலிருந்து விடுதலை பெற விரும்புகிறீர்களா?
வெற்றிக்கான சில படிகள் இங்கே உள்ளன:
1. உங்கள் பாவத்தை தேவனிடம் அறிக்கை செய்யுங்கள் (1 யோவான் 1:9).
2. உங்கள் மனதை தூய்மைப்படுத்தவும், புதுப்பிக்கவும், மாற்றவும் தேவனிடம் கேளுங்கள் (ரோமர் 12:2).
3. உங்கள் மனதை உண்மையான, நீதியான, தூய்மையான, அழகான மற்றும் பாராட்டுக்குரிய விஷயங்களால் நிரப்பும்படி தேவனிடம் கேளுங்கள் (பிலிப்பியர் 4:8)
4. உங்கள் உடலைப் பரிசுத்தத்தில் வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 4:3-4).
5. பாலுறவின் சரியான பொருளைப் புரிந்துகொண்டு, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உங்கள் துணையை மட்டும் சார்ந்திருங்கள் (1 கொரிந்தியர் 7:1-5).
6. நீங்கள் ஆவியில் நடந்தால், மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள் என்பதை உணருங்கள் (கலாத்தியர் 5:16).
7. ஆபாசப் படங்கள் மீதான உங்கள் வெளிப்பாட்டைக் குறைக்க நடைமுறை நடவடிக்கைகளை எடுங்கள். உங்கள் கணினியில் ஆபாசத் தடுப்பான்களை நிறுவவும், தொலைக்காட்சி மற்றும் வீடியோ பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், மேலும் உங்களுக்காக ஜெபித்து உங்களைப் பொறுப்பேற்க உதவும் மற்றொரு கிறிஸ்தவரைக் கண்டறியவும்.
ஆபாசத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறலாம். உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம், பாவம் உங்களை கவர்ந்திழுக்கும் எதையும் விட மிகவும் சிறந்தது.