விபச்சாரம் பெரும்பாலும் “பழமையான தொழில்” என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில், வேதாகம காலங்களில் கூட பெண்கள் பணம் சம்பாதிப்பதற்கான பொதுவான வழியாக இது இருந்தது. விபச்சாரம் ஒழுக்கக்கேடானது என்று பைபிள் சொல்கிறது. நீதிமொழிகள் 23:27-28 கூறுகிறது, “வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.”
Click Here To Read All Bible Question & Answers
விபச்சாரிகளுடன் ஈடுபடுவதை தேவன் தடைசெய்கிறார், ஏனென்றால் அத்தகைய ஈடுபாடு ஆண்களுக்கும் பெண்களுக்கும், தீங்கு விளைவிக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும். அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்” (நீதிமொழிகள் 5:3-5).
விபச்சாரம் திருமணங்கள், குடும்பங்கள் மற்றும் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், உடல் மற்றும் ஆவிக்குரிய மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆவி மற்றும் ஆன்மாவை அழிக்கிறது. தேவனின் விருப்பம் என்னவென்றால், “நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:13). 1 கொரிந்தியர் 6:13 கூறுகிறது, “சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.”
விபச்சாரம் பாவம் என்றாலும், விபச்சாரம் தொழில் செய்கிறவர்கள் தேவனின் மன்னிப்பு எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராகாப் என்ற விபச்சாரம் தொழில் செய்த பெண்ணை, அவர் பயன்படுத்தியதை பைபிள் பதிவு செய்கிறது. அவள் கீழ்ப்படிந்ததன் விளைவாக, அவளும் அவளுடைய குடும்பமும் வெகுமதியும், ஆசீர்வாதமும் பெற்றனர் (யோசுவா 2:1; 6:17-25).
புதிய ஏற்பாட்டில், பாலியல் பாவியாக அறியப்பட்ட ஒரு பெண்ணை, இயேசு கிறிஸ்து மன்னித்து பாவத்திலிருந்து சுத்திகரித்தார். ஒரு பரிசேயரின் வீட்டிற்கு இயேசு சென்றிருந்தபோது அவள், அவருக்கு சேவை செய்ததை கண்டார். அந்தப் பெண், கிறிஸ்து யார் என்பதை உணர்ந்து, விலையுயர்ந்த வாசனை திரவியத்தை அவரிடம் கொண்டு வந்தார். வருந்தியவளும், மனந்திரும்பியும், அந்த பெண் அழுது, அவரது பாதங்களில் நறுமணத்தை ஊற்றி, தன் தலைமுடியால் துடைத்தாள்.
“ஒழுக்கமற்ற” பெண்ணிடமிருந்து இந்த அன்பின் செயலை ஏற்றுக்கொண்டதற்காக பரிசேயர்கள் இயேசுவை விமர்சித்தபோது, அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார் மற்றும் அந்த பெண்ணின் வழிபாட்டை ஏற்றுக்கொண்டார். அவளுடைய விசுவாசத்தின் காரணமாக, கிறிஸ்து அவளுடைய எல்லா பாவங்களையும் மன்னித்தார், மேலும் அவள் அவருடைய ராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாள் (லூக்கா 7:36-50).
தம்மைப் பற்றிய உண்மையை நம்ப மறுத்தவர்களிடம் பேசிய இயேசு கிறிஸ்து, “அவர்களை நோக்கி: ஆயக்காரரும், வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்” (மத்தேயு 21:31-32).
மற்றவர்களைப் போலவே, விபச்சாரம் தொழில் செய்கிறவர்களும் தேவனிடமிருந்து இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் பெறுவதற்கும், அவர்களின் எல்லா அநியாயங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்படுவதற்கும், புத்தம் புதிய வாழ்க்கையை வழங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் பாவ வாழ்க்கையிலிருந்து விலகி, கிருபையும், கருணையும் எல்லையற்ற உயிருள்ள தேவனிடம் திரும்புவதுதான். “எனவே, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17).