
Quiz | Tamil Bible Quiz |
Chapter | மாற்கு [Mark] |
Number of Questions | 52 |
Check All Tamil Bible Quiz Here
மாற்கு வேத வினா விடை கேள்விகள்
கேள்வி-1 : வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் யாருடையது?
• இயேசுகிறிஸ்து
• சீமோன்
• யோவான் ஸ்நானகன்
• அந்திரேயா
பதில் : யோவான் ஸ்நானகன் |
கேள்வி-2 : நாசரேத்தூர் எத்தேசத்தில் இருந்தது?
• எகிப்து
• கப்பர்நகூம்
• கலிலேயா
• கானான்
பதில் : கலிலேயா |
கேள்வி-3 : இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவியவர் யார்?
• யோவான் ஸ்நானகன்
• ஆவியானவர்
• மரியாள்
• சாத்தான்
பதில் : ஆவியானவர் |
கேள்வி-4 : இயேசு எத்தனை நாட்கள் வனாந்தரத்தில் தங்கியிருந்தார்?
• 10 நாட்கள்
• 20 நாட்கள்
• 30 நாட்கள்
• 40 நாட்கள்
பதில் : 40 நாட்கள் |
கேள்வி-5 : இயேசு வனாந்தரத்தில் எவைகளின் நடுவே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்?
• ஆடுகள்
• காட்டுமிருகங்கள்
• மேய்ப்பர்கள்
• தூதர்கள்
பதில் : காட்டுமிருகங்கள் |
கேள்வி-6 : எந்த இடத்தில் வைத்து யோவான் இயேசுவுக்கு ஞானஸ்தானம் கொடுத்தார்?
• கலிலேயா கடல்
• யோர்தான் நதி
• சவக்கடல்
• செங்கடல்
பதில் : யோர்தான் நதி |
கேள்வி-7 : இயேசு அதிகாலையில் எழுந்து என்ன செய்தார்?
• புசித்தார்
• பிரயாணம்
• பிரசங்கிதார்
• ஜெபித்தார்
பதில் : ஜெபித்தார் |
கேள்வி-8 : “என் பின்னே வாருங்கள் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” என்று இயேசு யாரிடம் கூறினார்?
• சீமோன், யோவான்
• சீமோன், அந்திரேயா
• யாக்கோபு, யோவான்
• சீமோன், யாக்கோபு
பதில் : சீமோன், அந்திரேயா |
கேள்வி-9 : இயேசுவை அறிந்திருந்தவை எவை?
• ஜனங்கள்
• பிசாசுகள்
• தூதர்கள்
• சீஷர்கள்
பதில் : பிசாசுகள் |
கேள்வி-10 : இயேசு எந்த இடங்களில் தங்கியிருந்தார்?
• கடலில்
• ஆலயத்தில்
• வனாந்திரத்தில்
• கூடாரத்தில்
பதில் : வனாந்திரத்தில் |
கேள்வி-11 : நாலுபேர் கட்டிலில் யாரை சுமந்து கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்?
• திமிர்வாதக்காரன்
• பார்வையற்றவன்
• குஷ்டரோகி
• திருடன்
பதில் : திமிர்வாதக்காரன் |
கேள்வி-12 : இயேசு சுகம் பெற்ற குஷ்டரோகியிடம் என்ன அறிவுரை கூறினார்?
• என்னை பின்பற்றி வா
• எல்லா மனிதர்களிடமும் என்னை சாட்சியிடு
• போ இனி பாவம் செய்யாதே
• ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு
பதில் : ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு |
கேள்வி-13 : ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவன் யார்?
• மத்தேயு
• லேவி
• பேதுரு
• யாக்கோபு
பதில் : லேவி |
கேள்வி-14 : சீஷர்கள் ஓய்வு நாளில் என்ன செய்தார்கள் என்று பரிசேயர்கள் சொன்னார்கள்?
• அத்தி பழங்களை பறித்தார்கள்
• அப்பத்தை புசித்தார்கள்
• கதிர்களை கொய்ய தொடங்கினார்கள்
• ஒலிவ பழங்களை பறித்தார்கள்
பதில் : கதிர்களை கொய்ய தொடங்கினார்கள் |
கேள்வி-15 : மலையருகே மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
• ஏறக்குறைய இரண்டாயிரம்
• ஏறக்குறைய நாலாயிரம்
• ஏறக்குறைய ஐந்தாயிரம்
• ஏறக்குறைய ஏழாயிரம்
பதில் : ஏறக்குறைய இரண்டாயிரம் |
கேள்வி-16 : எந்த வல்லமையினால் இயேசு பிசாசுகளை துரத்தினதாக கூறினார்கள்?
• அவருடைய சொந்த வல்லமையினால்
• பெயல்செபூல் பிசாசின் வல்லமையினால்
• தேவ வல்லமையினால்
• சீஷர்களின் வல்லமையினால்
பதில் : பெயல்செபூல் பிசாசின் வல்லமையினால் |
கேள்வி-17 : இயேசு யாரை இவர்கள் தான் தன்னுடைய சகோதரனும், சகோதரியும், தாயுமாயிருக்கிறார்கள் என்றார்?
• பரிசேயர்கள்
• அவருடைய சீஷர்கள்
• தேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவர்களே
• யூதர்கள்
பதில் : தேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவர்களே |
கேள்வி-18 : இயேசுவுக்கு சகோதரிகள் இருந்தார்களா?
• சகோதரிகள் இருந்தார்கள்
• சகோதரிகள் இல்லை
பதில் : சகோதரிகள் இருந்தார்கள் |
கேள்வி-19 : தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலும் கனவீனமடைபவன் யார்?
• நீதிமான்
• தீர்க்கதரிசி
• விசுவாசி
• நீதிமான்
பதில் : தீர்க்கதரிசி |
கேள்வி-20 : இயேசு ஜனங்களுக்கு எப்படி போதித்தார்?
• வார்த்தைகள மூலம்
• கடிதங்கள் மூலம்
• உவமைகள் மூலம்
• பாடல்கள் மூலம்
பதில் : உவமைகள் மூலம் |
கேள்வி-21 : மனுஷருடைய கற்பனைகளை உமதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொல்லிய தீர்க்கதரிசி யார்?
• எரேமியா
• எலியா
• ஏசாயா
• எலிசா
பதில் : ஏசாயா |
கேள்வி-22 : எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன?
• விடுதலடைவாயாக
• சுகமடைவாயாக
• திறக்கப்படுவாயாக
• ரட்சிக்கப்படுவாயாக
பதில் : திறக்கப்படுவாயாக |
கேள்வி-23 : யாருக்கு எல்லாம் கூடும் என்று இயேசு கூறினார்?
• நீதிமான்
• விசுவாசிக்கிறவன்
• திக்கற்றவன்
• பார்வையற்றவன்
பதில் : விசுவாசிக்கிறவன் |
கேள்வி-24 : யாரை இயேசு தொடும்படிக்கு அவரிடம் கொண்டு வந்தார்கள்?
• விதவைகள்
• குருடர்கள்
• சிறுபிள்ளைகள்
• குஷ்டரோகிகள்
பதில் : சிறுபிள்ளைகள் |
கேள்வி-25 : விதைக்கிறவன் எதை விதைத்தான்?
• வசனத்தை
• வெள்ளைப்போளத்தை
• அன்பை
• நல்லிணக்கத்தை
பதில் : வசனத்தை |
கேள்வி-26 : இயேசு கேட்டார் விளக்கை கொளுத்தி _________ கீழாக வைப்பார்களா?
• மேசையின்
• மரக்கால் அல்லது கட்டிலின்
• வீட்டின்
• மரக்கால் அல்லது மேசையின்
பதில் : மரக்கால் அல்லது கட்டிலின் |
கேள்வி-27 : இயேசு சொன்னார் கேட்கிற உங்களுக்கு _____________
• அதிகம் கொடுக்கப்படும்
• குறைய கொடுக்கப்படும்
• உள்ளதும் எடுக்கப்படும்
• குறைய எடுக்கப்படும்
பதில் : அதிகம் கொடுக்கப்படும் |
கேள்வி-28 : இயேசு சொன்னார் ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து இரவில் தூங்க அது முளைக்கிறது போல __________ வரும்?
• திகில்
• சொப்பனம்
• தேவனுடைய ராஜ்யம்
• மரணம்
பதில் : தேவனுடைய ராஜ்யம் |
கேள்வி-29 : இயேசு _________ விதையை தேவனுடைய ராஜ்ஜியத்தோடு ஒப்பிட்டார்?
• ஆப்பிள்
• ஒலிவ
• பேரிச்சை
• கடுகு
பதில் : கடுகு |
கேள்வி-30 : இயேசுவும், சீடர்களும் பலத்த சுழல் காற்று எழும்பின போது எங்கே இருந்தார்கள்?
• ஆலயத்தில்
• மலையில்
• படகில்
• வனாந்தரத்தில்
பதில் : படகில் |
கேள்வி-31 : அசுத்த ஆவியினுடைய பெயர் என்ன?
• லேகியோன்
• எஸ்றா
• பெயல்செபுல்
• பாகால்
பதில் : லேகியோன் |
கேள்வி-32 : இயேசுவிடம் தன் மகளை சுகப்படுத்தும் படி வேண்டிக்கொண்ட ஜெப ஆலயத் தலைவனுடைய பெயர் என்ன?
• நிக்கதேமு
• யோசேப்பு
• யவீரு
• காய்ப்பா
பதில் : யவீரு |
கேள்வி-33 : இயேசுவின் வஸ்திரத்தை தொட்டது யார்?
• ஜெப ஆலயத்தலைவன்
• 12 வருட பெரும்பாடுள்ள ஸ்திரி
• சகேயு
• 12 வயது சிறுபெண்
பதில் : 12 வருட பெரும்பாடுள்ள ஸ்திரி |
கேள்வி-34 : பிள்ளை மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்று இயேசு கூறின போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?
• தேவனை மகிமைப்படுத்தினார்கள்
• வீட்டிற்கு போனார்கள்
• ஆச்சர்யப்பட்டார்கள்
• நகைத்தார்கள்
பதில் : நகைத்தார்கள் |
கேள்வி-35 : சிறு பெண்ணே எழுந்திரு?
• எப்பத்தா
• தலித்தாகூமி
• லாமா சபக்தானி
• ஏலி ஏலி
பதில் : தலித்தாகூமி |
கேள்வி-36 : யாருடைய மாமியார் ஜுரமாய் கிடந்தார்?
• மாற்கு
• யோவான்
• சீமோன் பேதுரு
• அந்திரேயா
பதில் : சீமோன் பேதுரு |
கேள்வி-37 : யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கும்?
• துன்மார்க்கர்கள்
• ஐசுவரியமுள்ளவர்கள்
• திருடர்கள்
• கொலைபாதகர்கள்
பதில் : ஐசுவரியமுள்ளவர்கள் |
கேள்வி-38 : இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் கூப்பிட்டவன் யார்?
• யவீரு
• பர்திமேயு
• சகேயு
• 12 வருட பெரும்பாடுள்ள ஸ்திரி
பதில் : பர்திமேயு |
கேள்வி-39 : இருவழிச்சந்தியில் கட்டப்பட்டிருந்தது எது?
• ஆட்டுக்குட்டி
• கன்றுக்குட்டி
• கழுதைக்குட்டி
• ஒட்டகம்
பதில் : கழுதைக்குட்டி |
கேள்வி-40 : எல்லாரும் யாரை மெய்யான தீர்க்கதரிசி என்று எண்ணினார்கள்?
• மோசே
• யோவான் ஸ்நானகன்
• எரேமியா
• ஏசாயா
பதில் : யோவான் ஸ்நானகன் |
கேள்வி-41 : தன் வறுமையிலிருந்து காணிக்கை போட்டவள் யார்?
• ஏழை விதவை
• மார்த்தாள்
• மரியாள்
• சிறுபெண்
பதில் : ஏழை விதவை |
கேள்வி-42 : யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் சம்பவிக்கும் ஆனால் உடனே வராதது எது?
• வருகை
• பதில்
• இரட்சிப்பு
• முடிவு
பதில் : முடிவு |
கேள்வி-43 : சகல ஜாதிகளுக்கும் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டியது என்ன?
• வசனம்
• தீர்க்கதரிசனம்
• சுவிசேஷம்
• நியாயப்பிரமாணம்
பதில் : சுவிசேஷம் |
கேள்வி-44 : அந்த நாளையும் நாழிகையையும் அறிந்திருக்கிறவர் யார்?
• பிதா
• குமாரன்
• பரிசுத்த ஆவி
• சாத்தான்
பதில் : பிதா |
கேள்வி-45 : எதற்கு உட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும்?
• தீமை
• பெருமை
• சோதனை
• பொறாமை
பதில் : சோதனை |
கேள்வி-46 : எது நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்று இயேசு கூறினார்?
• வேதவாக்கியம்
• தீர்க்கதரிசனம்
• நியாயப்பிரமாணம்
• சுவிசேஷம்
பதில் : வேதவாக்கியம் |
கேள்வி-47 : இயேசுவின் சிலுவையை சுமக்கும் படி பலவந்தம் பண்ணப்பட்டவன் யார்?
• மத்தேயு
• சீமோன்
• யோவான்
• யவீரு
பதில் : சீமோன் |
கேள்வி-48 : இயேசுவை சிலுவையில் அறைந்தது எத்தனை மணி வேளையாயிருந்தது?
• முதலாம் மணி
• இரண்டாம் மணி
• மூன்றாம் மணி
• நான்காம் மணி
பதில் : மூன்றாம் மணி |
கேள்வி-49 : இயேசு யாரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் நிறைவேறினது?
• துன்மார்க்கர்
• அக்கிரமக்கார்
• சுவிசேஷகர்
• போதகர்
பதில் : அக்கிரமக்கார் |
கேள்வி-50 : அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு எதுவரக்காத்திருந்தான்?
• தேவனுடைய ராஜ்யம்
• தேவனுடைய ரட்சிப்பு
• தேவனுடைய வார்த்தை
• தேவனுடைய வல்லமை
பதில் : தேவனுடைய ராஜ்யம் |
கேள்வி-51 : இயேசு எழுந்திருந்த பின் முதல் முதல் யாருக்கு தரிசனமானார்?
• கன்னி மரியாள்
• மகதலேனா மரியாள்
• மார்த்தாள்
• அன்னாள்
பதில் : மகதலேனா மரியாள் |
கேள்வி-52 : எதை விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்?
• வேதவாக்கியத்தை
• தீர்க்கதரிசனத்தை
• நியாயப்பிரமாணத்தை
• சுவிசேஷத்தை
பதில் : சுவிசேஷத்தை |
Download மாற்கு வேத வினா விடை கேள்விகள் PDF Here
Similar Searches:
tamil mark bible quiz, mark bible quiz in tamil, mark bible quiz questions and answers in tamil pdf, mark bible quiz questions and answers in tamil, mark tamil bible quiz, bible quiz mark chapter 1-10 in tamil, bible tamil quiz, mark bible questions and answers in tamil, mark quiz in tamil, tamil bible quiz chapter wise, tamil bible mark