Quiz | Tamil Bible Quiz |
Chapter | மத்தேயு [Matthew] |
Number of Questions | 83 |
மத்தேயு வேத வினா விடை கேள்விகள்
கேள்வி-1 : யோசேப்பிடம் மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள்ள பயப்படாதே என்று கூறியது யார்?
• எலிசபெத்
• தேவதூதன்
• மேய்ப்பர்கள்
• சாஸ்திரிகள்
பதில் : தேவதூதன் |
கேள்வி-2 : _______ தேசத்திலுள்ள பெத்லெகேமே
• கலிலேயா
• சமாரியா
• யூதேயா
• இவைகளில் எதுவுமில்லை
பதில் : யூதேயா |
கேள்வி-3 : மத்தேயு புத்தகம் யாருடைய வம்சவரலாறுடன் ஆரம்பிக்கிறது?
• இயேசு
• பேதுரு
• பவுல்
• ஆபிரகாம்
பதில் : இயேசு |
கேள்வி-4 : இயேசுவுக்கு ஞானஸ்தானம் கொடுத்தவர் யார்?
• யோவான் ஸ்நானகன்
• பேதுரு
• யோசுவா
• மத்தேயு
பதில் : யோவான் ஸ்நானகன் |
கேள்வி-5 : இம்மானுவேல் என்பதற்கு ___________
• தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
• தேவன் என்னோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
• தேவன் எங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
• தேவன் உங்களோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
பதில் : தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் |
கேள்வி-6 : இயேசுவின் வம்சவரலாறு வரிசையில் இடம் பெற்ற ராஜாவின் பெயர் என்ன?
• சவுல்
• தாவீது
• தரியு
• ஏரோது
பதில் : தாவீது |
கேள்வி-7 : சாந்தகுணமுள்ளவர்கள் எதை சுதந்தரித்துக் கொள்வார்கள்?
• பரலோக ராஜ்யம்
• வானம்
• நித்திய வாழ்வு
• பூமி
பதில் : பூமி |
கேள்வி-8 : வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் ____________
• இயேசு
• யோவான்
• பேதுரு
• யோவான்ஸ்நானன்
பதில் : யோவான்ஸ்நானன் |
கேள்வி-9 : மரியாள் மனைவியாக நியமிக்கப்பட்ட மனிதனுடைய பெயர் என்ன?
• தாவீது
• ஆபிரகாம்
• யோசேப்பு
• ஓபேத்
பதில் : யோசேப்பு |
கேள்வி-10 : உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறுகிறார்?
• பிடுங்கி எறிதல்
• மன்னிப்பதற்கு வேண்டுதல்
• அக்கினியில் எரித்துவிடு
• தரித்து எறிந்து போடு
பதில் : தரித்து எறிந்து போடு |
கேள்வி-11 : இயேசு ________ உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
• ஜலத்தினால்
• அக்கினியினால்
• பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும்
• பரிசுத்த ஆவியினால்
பதில் : பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் |
கேள்வி-12 : அவர்கள் கூடிவரும் முன்னே மாரியாள் எப்படி காணப்பட்டாள்?
• குஷ்டரோகியாயிருந்தாள்
• கர்பவதியானாள்
• காணாமல் போனாள்
• மிகவும் இளம் வயதுள்ளவளாதுள்ளவளாயிருந்தாள்
பதில் : கர்பவதியானாள் |
கேள்வி-13 : யோவான் என்ன ஆகாரம் உட்கொண்டான்?
• திராட்சைப்பழம்
• மீன்
• மன்னா
• வெட்டுக்கிளி காட்டு தேன்
பதில் : வெட்டுக்கிளி காட்டு தேன் |
கேள்வி-14 : யோசேப்பு எப்படிப்பட்ட மனிதனாயிருந்தார்?
• உயரமான மனிதனாயிருந்தார்
• நீதிமானாயிருந்தான்
• தொழில்முறை மனிதன்
• சோம்பேறி மனிதன்
பதில் : நீதிமானாயிருந்தான் |
கேள்வி-15 : மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, _________ பிழைப்பான்
• கிருபையினால்
• வார்த்தையினாலும்
• தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்
• வேத வார்த்தையினாலும்
பதில் : தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் |
கேள்வி-16 : கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு தரிசனமானான்?
• காலையில்
• ஆலயத்தில்
• பாலைவனத்தில்
• சொப்பனத்தில்
பதில் : சொப்பனத்தில் |
கேள்வி-17 : இயேசு கிறிஸ்து எதை குறித்து சொல்லும் போது ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கருப்பாக்கவும் உன்னால் கூடாது என்று கூறுகிறார்?
• உபவாசம்
• கர்த்தரின் சிங்காசனம்
• மன்னிப்பு
• சத்தியம்
பதில் : கர்த்தரின் சிங்காசனம் |
கேள்வி-18: ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் ______________
• அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
• அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்
• பரலோகராஜ்யம் அவர்களுடையது.
• அவர்கள் ஆறுதலடைவார்கள்.
பதில் : பரலோகராஜ்யம் அவர்களுடையது |
கேள்வி-19 : கர்த்தருடைய தூதன் யோசேப்பை நோக்கி மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள் ஏனெனில் அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது?
• ஆசாரியராக மாறுவார்
• ராஜாவாக இருப்பார்.
• பிரபலமானவராக இருப்பார்.
• பரிசுத்த ஆவியினால் உண்டானது
பதில் : பரிசுத்த ஆவியினால் உண்டானது |
கேள்வி-20 : தர்மஞ்செய்யும்போது எவ்வாறு இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்?
• துதித்தலுடன்
• சந்தோஷமாக
• அந்தரங்கமாக
• அமைதியாக
பதில் : அந்தரங்கமாக |
கேள்வி-21 : நீங்கள் பூமிக்கு _______________
• மண்ணாக இருக்கிறீர்கள்.
• உப்பாயிருக்கிறீர்கள்;
• தண்ணீராக இருக்கிறீர்கள்.
• வெளிச்சமாக இருக்கிறீர்கள்.
பதில் : உப்பாயிருக்கிறீர்கள் |
கேள்வி-22 : துதன் சொன்னார் அந்த குமாருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில்
• அது அழகான யூதப் பெயர்
• அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்.
• அது தீர்க்கதரிசியின் பெயர்.
• அவர் அனேகரால் அடையாளம் காணப்படுவார்
பதில் : அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார் |
கேள்வி-23 : __________ நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
• சதுசேயர் என்பவர்களுடைய
• வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய
• பரிசேயர் என்பவர்களுடைய
• இவர்களில் யாருமில்லை.
பதில் : வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய |
கேள்வி-24 : வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது ___________
• தேவனுடையது.
• அவருடைய பாதபடி.
• தேவனுடைய சிங்காசனம்.
• தேவனால் உண்டாக்கப்பட்டது.
பதில் : தேவனுடைய சிங்காசனம் |
கேள்வி-25 : இம்மானுவேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
• தேவன் நம்மோடு இருக்கிறார்
• தேவனுடைய ஆசிர்வாதம்
• தேவனுடைய பரிசு
• விசேஷித்த குழந்தை
பதில் : தேவன் நம்மோடு இருக்கிறார் |
கேள்வி-26 : உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் __________
• உங்கள் கவனம் இருக்கும்.
• உங்கள் இருதயமும் இருக்கும்.
• உங்கள் நினைவு இருக்கும்.
• எதுவும் இல்லை
பதில் : உங்கள் இருதயமும் இருக்கும் |
கேள்வி-27 : யேசேப்பு குழந்தைக்கு என்ன பேரிட்டார்?
• தாவீது
• ஆபிரகாம்
• யோசேப்பு
• இயேசு
பதில் : இயேசு |
கேள்வி-28 : ஜீவனுக்குப் போகிற வாசல் _____________அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
• விசாலமாயிருக்கிறது
• விரிவாயிருக்கிறது
• இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது
• இடுக்கமாயிருக்கிறது
பதில் : இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது |
கேள்வி-29 : பூமியிலே ___________ மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்
• அற்புதங்களை செய்ய
• பாவங்களை மன்னிக்க
• பிசாசுகளை துரத்த
• மரித்தவர்களை எழுப்ப
பதில் : பாவங்களை மன்னிக்க |
கேள்வி-30 : தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, ___________ கொஞ்சம்
• காலமோ
• வேலையாட்களோ
• நேரமோ
• எதுவும் இல்லை
பதில் : வேலையாட்களோ |
கேள்வி-31: எந்த பட்டணத்தில் இயேசு பிறந்தார்?
• எருசலேம்
• நாசரேத்
• பெத்லகேம்
• அந்தியோக்கியா
பதில் : பெத்லகேம் |
கேள்வி-32 : இயேசு ஆவியானவரால் எங்கே கொண்டுபோகப்பட்டார்?
• எருசலேமிற்க்கு
• ஆலயத்திற்கு
• வனாந்தரத்திற்க்கு
• எரிகோவிற்க்கு
பதில் : வனாந்தரத்திற்க்கு |
கேள்வி-33: ___________ நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று
• ஐந்தாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி
• ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி
• மூன்றாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி |
கேள்வி-34 : எத்தனை நாட்கள் இயேசு உபவாசமிருந்தார்?
• 10 நாட்கள் இரவும் பகலும்
• 40 நாட்கள் இரவும் பகலும்
• 30 நாட்கள் இரவும் பகலும்
• ஒரு வாரம்
பதில் : 40 நாட்கள் இரவும் பகலும் |
கேள்வி-35: சாஸ்திரிகள் வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்கு திரும்பினார்கள் ஏனெனில்?
• யோசேப்பு அவர்களிடம் சொன்னார்.
• அவர்கள் தொலைந்து போனார்கள்.
• அது வணிகப் பாதையாயிருந்து
• சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள்
பதில் : சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள் |
கேள்வி-36: பிசாசு இயேசுவிடம் சொன்னான் இந்த கல்லுகள் என்னவாக மாறும்படி சொல்லும்.
• மலைகளாக
• ஆலயமாக
• அப்பங்களாக
• தூதனாக
பதில் : அப்பங்களாக |
கேள்வி-37 : யோசேப்பு தேவதூதனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டு மாரியாளையும் இயேசுவையும் கூட்டிக் கொண்டு இந்த தேசத்திற்கு போகும் படி கூறினார்?
• நாசரேத்து
• எகிப்து
• பெத்லகேம்
• எருசலேம்
பதில் : எகிப்து |
கேள்வி-38 : எந்த மனிதன் காவலில் வைக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டு இயேசு கலிலேயாவுக்கு சென்றார்?
• ஏரோது ராஜா
• பேதுரு
• சீலா
• யோவான் ஸ்நானகன்
பதில் : யோவான் ஸ்நானகன் |
கேள்வி-39: யோசேப்பு மரியாளையும் இயேசுவையும் அழைத்து வந்து நாசரேத்தில் வாசம் பண்ணினான் தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது அ வர் இப்படி அழைக்கப்படுவார்
• சரிசெய்கிறவர்
• ஆலோசகர்
• தச்சன்
• நசரேயன்
பதில் : நசரேயன் |
கேள்வி-40 : இயேசு அந்திரேயாவையும் சீமோனையும் நோக்கி என் பின்னே வாருங்கள் நான் உங்களை…..
• மிகுதியான காரியங்களை கற்றுத் தருவேன்
• மிகுதியான அற்புதங்களை காண்பிப்பேன்
• என்னுடைய சீஷராக்குவேன்
• மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்
பதில் : என்னுடைய சீஷராக்குவேன் |
கேள்வி-41 : காணாமற்போன ஆடுகளாகிய _________ போங்கள்
• புற ஜாதிகளிடத்திற்குப்
• என்னை அறியாதவர்களிடத்திற்குப்
• இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப்
• சொந்த ஜனங்களிடத்திற்குப்
பதில் : இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் |
கேள்வி-42 : இயேசு அழைத்த செபதேயுவின் குமாரராகிய இந்த இரண்டு சகோதரர்களின் பெயர் என்ன?
• யாக்கோபும் பேதுருவும்
• யாக்கோபும் ம யோவானும்
• யாக்கோபும் அந்திரேயாவும்
• யோவானும் சீமோனும்
பதில் : யாக்கோபும் அந்திரேயாவும் |
கேள்வி-43 : சாஸ்திரிகள் இயேசுவுக்கு என்ன வெகுமதிகளை கொண்டு வந்தார்கள்?
• பொன், வெள்ளி மற்றும் வெண்கலம்
• பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும்
• பொன், தூபவர்க்கம் மற்றும் வெள்ளி
• எண்ணெய், வெள்ளி மற்றும் பொன்
பதில் : பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும் |
கேள்வி-44 : ஆகையால், சர்ப்பங்களைப்போல__________ புறாக்களைப்போலக் __________ இருங்கள்
• கபடற்றவர்களுாய், வினாவுள்ளவர்களுமாய்
• வினாவுள்ளவர்களுாய், கபடற்றவர்களுமாய்
• வீரியமாய், அமைதியாய்
• வீரியமாய், கபடற்றவர்களுாய்
பதில் : வினாவுள்ளவர்களுாய், கபடற்றவர்களுமாய் |
கேள்வி-45 : அவர்கள் எதை பின் தொடர்ந்து வந்து இயேசுவைக் கண்டார்கள்?
• அவர்களுடைய சொப்பனத்தை
• வழிகாட்டி
• மேகத்தை
• நட்சத்திரத்தை
பதில் : நட்சத்திரத்தை |
கேள்வி-46 : என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம்___________ இரட்சிக்கப்படுவான்
• காத்திருப்பவனே
• நிலைத்திருப்பவனே
• நம்புகிறவனே
• எதுவும் இல்லை
பதில் : நிலைத்திருப்பவனே |
கேள்வி-47 : நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள் ________உங்களுக்குக் குருவாயிருக்கிறார்
• கிறிஸ்து ஒருவரே
• இரட்சகர் ஒருவரே
• மனுஷகுமாரன் ஒருவரே
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : இரட்சகர் ஒருவரே |
கேள்வி-48 : சாஸ்திரிகள் பிள்ளையை கண்ட பொழுது அவர்கள்?
• அவரை மேசியா என உறுதிப்படுத்தவில்லை.
• ஆனந்தமாய் பாடினார்கள்
• அவர் முன் ஆடினார்கள்
• சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டார்கள்
பதில் : சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டார்கள் |
கேள்வி-49 : ____________ நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்
• ஆத்துமாவையும் சரீரத்தையும்
• ஆவியையும், சரீரத்தையும்
• ஆவியையும் ஆத்துமாவையும்
• எதுவும் இல்லை
பதில் : ஆத்துமாவையும் சரீரத்தையும் |
கேள்வி-50 : பரலோகராஜ்யம் ___________ என்று பிரசங்கியுங்கள்
• நித்தியமாயிருக்கிறது
• சமீபித்திருக்கிறது
• நிலைத்திருக்கிறது
• எதுவும் இல்லை
பதில் : சமீபித்திருக்கிறது |
கேள்வி-51 : சாஸ்திரிகள் இயேசுவை பணிந்து கொள்ள எங்கே இருந்து வந்தார்கள்?
• மேற்கு
• கிழக்கு
• வடக்கு
• தெற்கு
பதில் : கிழக்கு |
கேள்வி-52 : மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும்___________
• மனிதர்கள் முன்பாக மறுதலிப்பேன்
• தூதர்கள் முன்பாக வெறுப்பேன்
• பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
• எதுவும் இல்லை
பதில் : பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன் |
கேள்வி-53 : வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு _______ தருவேன்.
• நித்திய ஜீவன் தருவேன்
• சமாதானம்
• இளைப்பாறுதல்
• இரட்சிப்பை தருவேன்
பதில் : இளைப்பாறுதல் |
கேள்வி-54 : _________ எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
• பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன்
• கர்ததருடைய வேதத்தின் படி செய்கிறவன்
• நியாயபிரமாணத்தின்படி செய்கிறவன்
• எதுவும் இல்லை
பதில் : பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் |
கேள்வி-55 : யோவான்ஸ்நானன் எந்த வனாந்தரத்தில் பிரசங்கம்பண்ணினார்?
• கப்பர்நகூம்
• யூதேயா
• எகிப்து
• பெத்லகேம்
பதில் : யூதேயா |
கேள்வி-56 : நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, _______பலன் தருவான் என்றார்
• முப்பதாக
• அறுபதாக
• நூறாக
• நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும்
பதில் : நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் |
கேள்வி-57 : ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே ___________ போவேன் என்றார்
• கலிலேயாவுக்கு
• எருசலேமுக்கு
• யூதேயாவுக்கு
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : கலிலேயாவுக்கு |
கேள்வி-58 : ஏரோது ராஜா சாஸ்திரிகளிடம் சொன்னார் தானும் இயேசுவை பணிந்து கொள்ள விரும்புகிறேன் ஆனால் அவனுடைய உண்மையான நோக்கம்…..
• எருசலேமில் இருந்து நாடுகடத்தும்படி
• அவரை கொலை செய்யும்படி.
• அவரை அபிஷேகம் பண்ணும்படி
• அவரை ராஜாவாக முடிசூட்டும்படி
பதில் : அவரை கொலை செய்யும்படி |
கேள்வி-59 : பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; __________ உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்
• பரலோகத்திலிருக்கிற ஒருவரே
• தேவன் ஒருவரே
• கர்த்தர் ஒருவரே
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : பரலோகத்திலிருக்கிற ஒருவரே |
கேள்வி-60 : ஏரோது ராஜா சாஸ்திரிகள் தன்னிடமாய் திரும்பி வந்து நடந்தவைகளை அறிவிக்காததைக் கண்டபோது அவன்?
• சாஸ்திரிகளை சிறையில் அடைக்கும் படி கட்டளையிட்டார்.
• சாஸ்திரிகளை கொலை செய்யும்படி கட்டளையிட்டார்.
• எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைச் செய்தார்
• கண்டுகொள்ளவில்லை
பதில் : எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைச் செய்தார் |
கேள்வி-61 : நல்ல விதையை விதைக்கிறவன் ______________
• வேலைக்காரன்
• எஜமான்
• மனுஷகுமாரன்
• ஊழியக்காரன்
பதில் : மனுஷகுமாரன் |
கேள்வி-62 : அறுப்பு __________; அறுக்கிறவர்கள் _____________
• அறுவடை, ஊழியக்காரர்கள்
• உலகத்தின் முடிவு, ஊழியக்காரர்கள்
• உலகத்தின் முடிவு, தேவதூதர்கள்
• அறுவடை, தேவதூதர்கள்
பதில் : உலகத்தின் முடிவு,தேவதூதர்கள் |
கேள்வி-63 : மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே________உண்டாயிருக்கும்.
• அழுகையும், கண்ணீரும்
• அழுகையும், பற்கடிப்பும்
• வேதனையும், கண்ணீரும்
• பற்கடிப்பும், வேதனையும்
பதில் : அழுகையும், பற்கடிப்பும் |
கேள்வி-64 : நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே _________ பிரகாசிப்பார்கள்
• சந்திரனைப்போல
• நட்சத்திரங்களைப்போல
• சூரியனைப்போலப்
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : சூரியனைப்போலப் |
கேள்வி-65 : இயேசு ஞானஸ்நானம் பெற்றபொழுது இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது தேவ ஆவி எந்த ரூபத்தில் இறங்கினார்?
• பலத்த காற்றடிக்கிற முழக்கம் போல
• இறகைப்போல
• கழுகைப்போல
• புறாவைப் போல
பதில் : புறாவைப் போல |
கேள்வி-66 : வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்கு செவிகொடுங்கள்….
• இவரில் மகிமைப்படுவேன்
• இவருக்கு செவிகொடுங்கள்
• இவரில் பிரியமாயிருக்கிறேன்
• இவரை பின் தொடருங்கள்
பதில் : இவரில் பிரியமாயிருக்கிறேன் |
கேள்வி-67 : யோவானுடைய ஆடைகள் இவைகளால் செய்யப்பட்டிருந்து.
• கம்பளி
• குதிரைமயிர்
• ஆட்டுமயிர்
• ஒட்டகமயிர்
பதில் : ஒட்டகமயிர் |
கேள்வி-68 : இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் ____________ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது
• நம்பிக்கையோ
• இருதயமோ
• விசுவசமோ
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : இருதயமோ |
கேள்வி-69 : _______________ உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்
• மனுஷருடைய வழிகளை
• மனுஷருடைய கற்பனைகளை
• சொந்த கற்பனைகளை
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : மனுஷருடைய கற்பனைகளை |
கேள்வி-70 : வாயிலிருந்து புறப்படுகிறவைகள் __________ புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்
• ஆவியிலிருந்து
• சிந்தையிலிருந்து
• இருதயத்திலிருந்து
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : இருதயத்திலிருந்து |
கேள்வி-71 : இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்கு யோவானிடம் வந்த போது யோவான் என்னச் சொன்னார்?
• உம்மால் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க
• அவர்களுக்கு முன் ஞானஸ்நானமெடும்
• என்னோடு கூட இவர்களுக்கு ஞானஸ்நானம் கொடும்
• வேதவாக்கியம் நிறைவேற நான் உமக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்
பதில் : உம்மால் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க |
கேள்வி-72 : அப்பொழுது அவர், நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: _____________ என்றான்
• நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து
• தேவகுமாரன்
• மனுஷகுமாரன்
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து |
கேள்வி-73 : அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய _____
• விசுவாசம் தணிந்துபோம்
• நம்பிக்கை தணிந்துபோம்
• அன்பு தணிந்துபோம்
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : அன்பு தணிந்துபோம் |
கேள்வி-74 : இந்த ஜாதிப் பிசாசு _________ மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்
• விசுவாசத்தினாலும்,உபவாசத்தினாலுமேயன்றி
• துதியினாலும், ஜெபத்தினாலுமேயன்றி
• ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி |
கேள்வி-75 : ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னை __________ எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்
• தாழ்த்துகிறவன்
• சிறியவனாக நினைக்கிறவன்
• நினைக்கிறவன்
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : தாழ்த்துகிறவன் |
கேள்வி-76 : உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு __________
• பெரியவனாயிருக்க்க்கடவன்
• சிறியவனாயிருக்கக்கடவன்
• ஊழியக்காரனாயிருக்கக்கடவன்
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : ஊழியக்காரனாயிருக்கக்கடவன் |
கேள்வி-77 : உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற ______ அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து
• சதுசேயர்
• பரிசேயர்
• இவ்விருவரும்
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : சதுசேயர் |
கேள்வி-78 : யோவான்ஸ்நானன் என்ன பிரசங்கித்தார்
• தேவன் அன்பாயிருக்கிறார்
• நாம் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள் அவர் நம்மை சிருஷ்டித்தவர்
• மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது
• உங்களுடைய பிள்ளைகளை தேவனை குறித்ததான எச்சரிப்பிலே வளருங்கள்
பதில் : மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது |
கேள்வி-79 : தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் _______ சத்தியம்பண்ணுகிறான்
• அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும்
• இயேசுகிறிஸ்துவின் பேரில்
• தேவன்பேரில்
• மேற்கண்ட எதுவுமில்லை
பதில் : அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் |
கேள்வி-80 : யோவானுக்கு இவைககள் ஆகாரமாயிருந்தது.
• பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
• தேன் மற்றும் பழங்கள்
• வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும்
• ஓட்ஸ் மற்றும் உலர் கொட்டைகள்
பதில் : வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் |
கேள்வி-81 : யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஜனங்கள் எங்கே வந்தார்கள்?
• கலிலேயா கடலில்
• செங்கடல்
• யோர்தான் நதியில்
• நைல் நதியில்
பதில் : யோர்தான் நதியில் |
கேள்வி-82 : பரிசேயர்களையும் சதுசேயர்களையும் யோவான் எப்படி அழைத்தார்?
• பரிசுத்தமுள்ள தேவமனிதர்களே
• விரியன் பாம்புக்குட்டிகளே
• ஆபிரகாமால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே
• மூப்பர்களே
பதில் : விரியன் பாம்புக்குட்டிகளே |
கேள்வி-83 : யோவான் சொன்னார் எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார் அவர் உங்களுக்கு இவைகளால் ஞானஸ்நானம் கொடுப்பார்.
• புனித நீரால்
• பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும்
• தண்ணிராலும் இரத்தத்தாலும்
• அன்பினால்
பதில் : பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் |
Similar Searches:
tamil mathew bible quiz, matthew bible quiz in tamil, matthew bible quiz questions and answers in tamil pdf, matthew bible quiz questions and answers in tamil, matthew tamil bible quiz, bible quiz matthew chapter 1-10 in tamil, bible tamil quiz, matthew bible questions and answers in tamil, matthew quiz in tamil, tamil bible quiz chapter wise, tamil bible matthew
View Chapter Wise Tamil Bible Quiz Here