
ஆமையும் மூயலும்
ஆமையும் மூயலும் ஒரே ஊரில் வாழ்ந்து கொண்டிருந்தது. இரண்டு பேரும் நல்ல நண்பர்களாகவும் இருந்தனர். இவை இரண்டும் பேசிக்கொண்டது. நம்ம 2 பேரில் யார் சுறுசுறுப்பானவர் என்பது தெரிய வேண்டும். ஆகவே, ஒரு போட்டி ஒன்று நடத்துவோம் என்பதாக மூயல் கூறியது.
உடனே, பயத்தோடு ஆமை கூறியது, எப்படியானாலும் நீ தான் வெற்றி பெறுவாய், அதனால தான நீ இந்த ஒரு காரியத்தை சொல்கிறாய் என்றது. அப்படியல்ல போட்டி என்கிற பொழுத 2 பேருமே முயற்சி செய்வோம். யார் ஜெயிக்கிறா? என்பதை பார்ப்போம் என்றது முயல்.
ஆமை அதற்கு சரி என்று கூறிவிட்டது. ஆனால் அது மனதில் யோசித்து கொண்டே இருந்தது, நாம் தான் மெதுவாக தானே போவோம். மூயல் இரண்டே குதி குதிக்கும், வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்தது. ஆனால், சோர்ந்து போகவில்லை.
போட்டி நாள் வந்தது. இரண்டும் களத்தில் இறங்கியது. போட்டி ஆரம்பிக்க விசில் அடிக்கப்பட்டது. அடித்ததும், ஒரே பாய்ச்சலில் மூயல் பாதி மைதானம் தாண்டி நின்றது, யோசித்தது பின்னாடி திரும்பி பார்த்தது. ஆமை நகர்ந்து, நகர்ந்து 2 அடி கூட வரவில்லை. உடனே, மூயல் மனதில் யோசித்தது.
அது வருவதற்குள் நாம் ஒரு தூக்கம் தூங்கி எழுந்திருக்கலாம் என்று நினைத்து, சற்றே தூங்கி விட்டது. தூங்கி விழித்து பார்த்தால் ஆமை செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று, வெற்றி வாகையோடு நின்று கொண்டிருந்தது. தூக்கத்திலிருந்து விழித்த மூயலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அழுதது, புலம்பினது….
பாருங்க குட்டீஸ்! யோசிப்பது நல்லதை யோசிக்க வேண்டும், என்றுமே. அது நல்லதாக முடியும். முயலை போல தன்னுடைய மனதில் பெருமையை வைத்துக் கொண்டு யோசித்த யோசனை தோல்வியில் முடிந்து விட்டது. பார்த்தீங்களா குட்டீஸ்! ஆகவே, எதை யோசித்தாலும் நல்லதாக யோசிக்க. வேண்டும். பிறருக்கு நன்மை அளிப்பதாக யோசிக்க வேண்டும். பிறரை அவமதிப்பதாகவோ, பிறருக்கு தீமை அளிப்பதாகவோ யோசிப்பது, அது கடைசியில் நமக்கே ஆபத்தாக முடியும். குட்டஸ்! ஆகவே, ஜாக்கிரதையோடு நல்லதை யோசித்து, முடிவடுக்க பழகிக்கொள்ளுங்கள். |
Click Here To Read More Tamil Christian Kids Stories