காலத்தைப் பிரயோஜனப்படுத்து

[அப்துல், ஜோசப், விக்னேஷ் மூவரும் நண்பர்கள்]

(வகுப்பறையில்……)

ஜோசப் : Hi, அப்துல். நேத்து நம்ம Maths Sir கொடுத்த Sum-அ Solve பண்ணிட்டயா?

அப்துல் : இல்ல. எவ்வளோ Try பண்ணியும் Answer-அ கண்டுபிடிக்க முடியல டா.

ஜோசப் : எனக்கும் தான் டா.  நம்ம விக்னேஷ் தான் Maths-ல  புலியாச்சே அவன் கண்டிப்பா Answer-அ கண்டு

பிடிச்சிருப்பான்.  ஆமா அவன் ஏன் இன்னும் Class-க்கு வரல.

அப்துல் : அந்தா வந்துட்டான் பாரு.

ஜோசப் : டேய் விக்னேஷ். ஏன்டா லேட்டு? ஏன் ஒரு மாதிரி  இருக்க. Any Problem?

விக்னேஷ் :  ஒன்னும் இல்ல டா. இன்னைக்கும் அப்பா Fees தரல  நாளைக்கு தரேன்னு சொல்லிட்டாங்க. Miss கேட்டா என்ன  சொல்ல. அதான் பயமா இருக்கு.

ஜோசப் : Don’t Worry டா. Miss ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ  பயப்படாத.

விக்னேஷ் :  Ok டா.

ஜான் : டேய் மச்சான், நீங்க இங்க தான் இருக்கிங்களா. நாளைக்கு  நமக்கு Special Class-ஆம், English Mam சொன்னாங்க.

நாங்க Class-அ Cut அடிச்சிட்டு படத்துக்கு போறோம். நீங்களும்  வர்றீங்களா?

விக்னேஷ் :  இல்ல டா வரல.

 ஜான் : ஏன் டா?

 விக்னேஷ் :  காசு இல்ல டா?

 ஜான் : உங்க அப்பா கிட்ட Exam-க்கு Miss பணம் கொண்டுவர  சொன்னாங்கனு பொய் சொல்லி வாங்கிட்டு வாடா.

 விக்னேஷ் :  எங்க அப்பாவும், அம்மாவும் கூலி வேலைக்கு போய்  ரொம்ப கஷ்டப்பட்டு தான் என்ன படிக்க

வைக்கிறாங்க. இன்னும்  School Fee கூட கட்டல. அவுங்கள என்னால ஏமாத்த  முடியாதுடா.  அதனால நான் வரல டா.

ஜான் : ஜோசப், நீ வர்றயா?

ஜோசப் : சினிமாவுக்கா வாய்ப்பே  இல்ல, என் Parents Allow பண்ண  மாட்டாங்கடா. So, நான் வரல.

அப்துல் : என் Friends வரலைனா நானும் வரல ஜான்.

 ஜான் : போங்கடா. எப்ப கேட்டாலும் எதாவது ஒரு காரணம் சொல்லுங்க.  நீங்க வரலைனா என்ன நாங்க போய் Enjoy

பண்ணிட்டு வரோம். Byeeee.

 ஜோசப் : அவன் கெடக்குறான். ஆமா அப்துல், ரொம்ப நேரமா நீ  என்னத்த தேடிக்கிட்டு இருக்க.

அப்துல் : எங்க அப்பா என்னோட Birthday-க்கு ஒரு Pen Gift பண்ணுனாங்க. அத காணோம்டா அதத்தான் தேடிக்கிட்டு 

இருக்கேன்.

 ஜோசப் : பொறுமையா தேடு. இங்க தான் எங்கயாவது இருக்கும்.

 விக்னேஷ் :  டேய் அப்துல், அந்த கோல்டன் கலர் Pen தான. அத  சுனில் தான் வச்சிருக்கான். நான் பாத்தேன்.

 அப்துல் : டேய் சுனில், நீ வச்சிருக்கிறது என்னோட Pen. குடுடா அத.

 சுனில் : இது என்னோட Pen. என்னோட Friend எனக்கு  கொடுத்தான்.

 ஜோசப் : இவனுக்கு இதே வேலையா போச்சு. வாடா நம்ம மிஸ்  கிட்ட போய் சொல்லுவோம்.

 அப்துல் : வேணாம் டா பாவம். மிஸ் கிட்ட சொன்ன அவன  அடிப்பாங்க. Pen தான வச்சிட்டு போகட்டும்.

 ஜோசப் : உன் இஷ்டம்டா.

அப்துல் : சுனில். அது என்னோட Pen-னு எனக்கு தெரியும். ஆனா  நீ அத என்கிட்ட கேட்டு வாங்கியிருக்கலாம்.

திருடுறது ரொம்ப  தப்பு. இனி அப்படி பண்ணாத. அந்த Pen-அ என்னோட Gift-ஆ  நீயே வச்சுக்கோ.

 சுனில் : Sorry. அப்துல் என்னய மன்னிச்சிரு.

 அப்துல் : It’s Ok டா. பரவலா.

 [ஜோசப் வீடு – இரவு குடும்ப ஜெபத்தில்…..]

ஜோசப் : அப்பா எனக்கு ரொம்ப நாளா ஒரு Doubt.

அப்பா : என்ன Doubt ஜோசப்.

ஜோசப் : உண்மையான Christian-னா யாருப்பா?

அப்பா : ஹா ஹா… நல்ல கேள்வி தான். சொல்றேன் கேளு. ஒருத்தரோட Certificate-ல Christian-னு இருக்குறதனாலயோ,

இல்ல  Sunday, Sunday ஒழுங்கா Church-க்கு போறதுனாலயோ ஒருதவுங்க  Christian ஆயிட முடியாது. யாரெல்லாம்

இயேசப்பாவையும்,   பைபிள்-ல அவர் சொன்ன வார்த்தைகள Follow பண்ணுறாங்களோ  அவுங்க தான் உண்மையான

Christian.

 ஜோசப் : இயேசப்பா பைபிள்-ல என்ன சொல்லிருக்காங்க?

 அம்மா : அதுக்கு நீ மொத பைபிள் ஒழுங்கா படிக்கணும், அப்ப  தான் இயேசப்பா என்ன சொல்லிருக்காங்கனு தெரியும்.

 ஜோசப் :  Ok மா, இனி நான் ஒழுங்கா பைபிள் படிக்கிறேன்.  இப்ப  முக்கியமானத மட்டும் நீங்க சொல்லுங்க மா.

 அம்மா : Hmmm… எல்லார் கிட்டயும் அன்பா இருக்கணும், யாராவது  தப்பு பண்ணுனா அவுங்கள மன்னிக்கணும்,

பொய் சொல்ல  கூடாது, அப்பா அம்மா சொல்லுறத கேட்கணும். இன்னும் நிறைய இருக்கு ஜோசப்.

 ஜோசப் :  என்னோட Friends அப்துல்-உம், விக்னேஷ்-உம் நீங்க  சொன்னதெல்லாம் செய்யுறாங்க. ஆனா அவுங்க

இயேசப்பாவ   Follow பண்ணல. அதனால அவுங்க நல்லவுங்களா இருந்தும்  நரகத்துக்கு போய்யிருவங்களா?

 அப்பா : இல்ல ஜோசப். அதுக்கு தான் கர்த்தர் நம்மள அவருடைய  பிள்ளைகளா அழைச்சிருக்காங்க. ஆனா நம்ம

எப்படி இருக்கோம்  எல்லாந் தெரிஞ்சும் உலகத்தார் போல தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.

 ஜோசப் :  அப்ப நம்ம எப்படி இருக்கணும்?

 அம்மா : நம்ம கடைசி காலத்துல இருக்கோம் ஜோசப். இயேசப்பா  சீக்கிரமா வர போறாங்க. ஆனா நல்லவர்களா

இருந்தும்  இன்னும்  இயேசுவை அறியாத மக்கள் நிறைய பேர் இந்த  உலகத்துல இருக்காங்க. அவுங்க  எல்லாருக்கும்

நாம தான்  இயேசப்பாவ பத்தி சொல்லணும். நாட்கள் பொல்லாதவையா  இருக்கு So,  நம்ம தான்  காலத்தை

 பிரயோஜன படுத்திக்கொள்ளனும் ஜோசப்.

 ஜோசப் :  Ok மா, நானும் என்னோட Friends-க்கு இயேசப்பாவ பத்தி  சொல்லி அவுங்களையும் இயேசப்பா வரப்ப

கூட்டிட்டு  போயிருவேன் மா.

 அம்மா : Good Boy.  இப்ப உன் Friends எல்லாரும் இரட்சிக்க  படணும்னு Prayer பண்ணுவோமா?

 ஜோசப் :  Ok மா.

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். இதோ,   சீக்கிரமாய்வருகிறேன்; அவனவனுடைய  கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்  பலன் என்னோடே  கூட வருகிறது.

Similar Searches:
tamil christian bible story, christian bible story in tamil, tamil christian bible stories, christian tamil stories, jesus tamil bible, christian tamil bible, christian tamil books, bible stories tamil pdf, tamil christian bible study pdf, christian tamil story, christian bible story for kids, what is the story of christian, christian books for 10 year olds, story bible examples, what is the christian story of creation, christian bible story, christian bible story in tamil, christian bible story for children, christian bible lesson for kids, christian bible stories for toddlers, christian books for 7 year olds, christian story books for 8-10 year olds, christian books for 7th graders, bibles for 5-7 year olds

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 203 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *